8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக காத்திருக்கிறார்கள். 8வது ஊதியக் குழுவின் விதிமுறைகள் மற்றும் குழு உறுப்பினர்களின் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இந்த செயல்முறையை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
RSCWS: ரயில்வே மூத்த குடிமக்கள் நலச் சங்கம் விடுத்த கோரிக்கை
சமீபத்தில், ரயில்வே ஓய்வூதியதாரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பான ரயில்வே மூத்த குடிமக்கள் நலச் சங்கம் (RSCWS), 8வது மத்திய ஊதியக் குழுவின் (CPC) அமலாக்கம் விரைவில் நடக்க வேண்டும் என்றும் அதன் செயல்பாட்டை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரி பிரதமர் நரேந்திர மோடியை அணுகியது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் மிகப்பெரிய நிவாரணம்
8வது மத்திய ஊதியக் குழுவின் அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள 47 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களிடையே மிகப்பெரிய நிவாரணத்தையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வந்ததாக RSCWS குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், அதன் 8வது ஊதியக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் அதன் விதிமுறைகளை (ToR) இறுதி செய்தல் உள்ளிட்ட ஆணையத்தின் முறையான அமலாக்கத்தில் தாமதம், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மை மற்றும் அச்சத்திற்கு வழிவகுக்கிறது.
"இந்த நீண்டகால மௌனமும், ஆணையத்தை முறைப்படுத்துவதில் உறுதியான முன்னேற்றம் இல்லாததும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மை மற்றும் அச்சத்திற்கு வழிவகுக்கிறது," என்று RSCWS தலைவர் TS கல்ரா ஜூன் 30, 2025 அன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு மிக முக்கியம்
8வது ஊதியக்குழு சரியான நேரத்தில் செயல்படுவது, குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கு அதிக முக்கியமானது. இதற்கான காரணங்களையும் அந்தக் கடிதம் பட்டியலிட்டுள்ளது.
பொருளாதார யதார்த்தங்களை நிவர்த்தி செய்தல்: தற்போதைய 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடையும் நிலையில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொண்டுள்ள பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின் தாக்கத்தை நிவர்த்தி செய்ய, ஊதிய கட்டமைப்புகளை விரைவாக மதிப்பாய்வு செய்து திருத்துவது அவசியம்.
மன உறுதியையும் உற்பத்தித்திறனையும் அதிகரித்தல்: புதிய ஊதிய விகிதங்களை தெளிவாக செயல்படுத்துவதும், சரியான நேரத்தில் செயல்படுத்துவதும் மத்திய அரசு பணியாளர்களின் மன உறுதியையும் உந்துதலையும் கணிசமாக அதிகரிக்கும். இது இறுதியில் அவர்களின் செயல்பாட்டுத்திறன் மற்றும் பொது சேவைக்கான அர்ப்பணிப்பை அதிகரிக்கும்.
நிதி பாதுகாப்பை உறுதி செய்தல்: ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, ஓய்வூதியங்களை சரியான நேரத்தில் திருத்துவது அவர்களின் நிதிப் பாதுகாப்பிற்கும், அவர்களின் வயது மூப்பில் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கும் மிக முக்கியமானது.
ஊகங்கள் மற்றும் வதந்திகளைத் தடுப்பது: ஆணையத்தை முறைப்படுத்துவதிலும் அதன் ToR-ஐ வெளியிடுவதிலும் ஏற்படும் தாமதங்கள் பெரும்பாலும் பரவலான ஊகங்கள் மற்றும் வதந்திகளுக்கு வழிவகுக்கும். சரியான பதுப்பிப்பு இந்த பிரச்சனையை நீக்கும். மேலும் சீரான செயல்பாடு அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையையும் வளர்க்கும் என்று RSCWS கூறியது.
8th Pay Commission Key Demands: 8வது ஊதியக்குழு முக்கிய கோரிக்கைகள்
மேற்கூறிய காரணங்களை மேற்கோள் காட்டி, பிரதமருக்கு RSCWS எழுதிய கடிதத்தில் பின்வரும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
Constitution of 8th Pay Commission: 8வது ஊதியக்குழு ஆணையத்தின் உடனடி அமைப்பு
8வது ஊதிஉயக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
Terms of Reference: குறிப்பு விதிமுறைகள்
ஆணையத்தின் பணியின் நோக்கத்தை (ToR) தெளிவுபடுத்துதல், கொடுப்பனவுகள், ஓய்வூதியம் தொடர்பான சலுகைகளை மறுஆய்வு செய்வதற்கான ஆணை மற்றும் மாற்றப்பட்ட ஓய்வூதிய மறுசீரமைப்பு கால மாற்றம் (Commuted Pension) போன்ற குறிப்பிட்ட கோரிக்கைகளை நிவர்த்தி செய்தல்.
Timeline: தெளிவான காலக்கெடுவை அமைத்தல்
ஜனவரி 1, 2026 முதல் திருத்தப்பட்ட ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, அதன் பரிந்துரைகளை சமர்ப்பித்தல் உட்பட ஆணையத்தின் பணிக்கான ஒரு உறுதியான காலக்கெடுவை உருவாக்கி அதை பகிர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் ஒரு விரைவான அணுகுமுறை, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் என்றும் அவர்களின் உண்மையான கவலைகள் தேவையற்ற தாமதமின்றி தீர்க்கப்படுவதை உறுதி செய்யும் என்றும் RSCWS தலைவர் கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ