Home> Business
Advertisement

8வது ஊதியக்குழு FAQs: ஊதிய உயர்வு முதல் அரியர் வரை, அனைத்து கேள்விகளுக்கும் பதில் இதோ

8th Pay Commission FAQs: 8வது ஊதியக் குழு எப்போது வரும்? இதில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? ஃபிட்மென்ட் ஃபாக்டர் எந்த அளவில் தீர்மானிக்கப்படும்? ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இவற்றின் விடைகளை இங்கே காணலாம்.

8வது ஊதியக்குழு FAQs: ஊதிய உயர்வு முதல் அரியர் வரை, அனைத்து கேள்விகளுக்கும் பதில் இதோ

8th Pay Commission: 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மனதில் இது குறித்த ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன. 8வது ஊதியக் குழு எப்போது வரும்? இதில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? ஃபிட்மென்ட் ஃபாக்டர் எந்த அளவில் தீர்மானிக்கப்படும்? ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இவற்றின் விடைகளை இங்கே காணலாம்.

1. Central Government Employees:

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களூக்கு 8வது ஊதியக்குழு தொடர்பாக இருக்கும் குழப்பத்தை நீக்க, முழுமையான FAQ வழிகாட்டியை, அதாவது அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவற்றுக்கான பதில்களை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இதில், அரசாங்கத்தையும் ஊழியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான NC-JCM இலிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எளிதான மற்றும் சுருக்கமான பதில்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. 

2 8th Pay Commission: 8வது ஊதியக்குழு என்றால் என்ன? 

இது அரசாங்கத்தால் உருவாக்கப்படும் குழு. இது அரசு ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியத்தை மதிப்பாய்வு செய்கிறது. பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவைப் பொறுத்து ஊதியக்குழுக்கள் மூலம் 10 வருடங்களுக்கு ஒரு முறை சம்பளம் எவ்வளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகின்றது.

3. 8வது சம்பளக் குழு முந்தையவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடும்?

இந்தியா இப்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இருப்பதால், கடந்த 10 ஆண்டுகளில் ஊழியர்களின் நிதிச் சவால்களும் மாறிவிட்டதால் இது மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சம்பளக் குழு இந்தப் புதிய சவால்களை எதிர்கொள்ளும்.

4. Central Government Employees and Pensioners: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்

யார் இதனால் பலனடைவார்கள்? இதன் நேரடிப் பலன் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் (பொதுமக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள்), ஓய்வூதியதாரர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அகில இந்திய சேவை அதிகாரிகளுக்கும் கிடைக்கும். இந்தியாவில், மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளக் குழு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படுகிறது.

5. 6th Pay Commission and 7th Pay Commission 6வது மற்றும் 7வது ஊதியக் குழுக்களில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் என்ன?

6வது ஊதியக் குழு 'பே பேண்ட்' மற்றும் 'கிரேடு பே' முறையை அறிமுகப்படுத்தியது. 7வது ஊதியக்குழு அதை நீக்கி 'பே மேட்ரிக்ஸ்' மற்றும் சீரான 'ஃபிட்மென்ட் ஃபாக்டர்' என்ற சூத்திரத்தை செயல்படுத்தியது.

6. அதை செயல்படுத்துவதில் ஏதேனும் சவால்கள் உள்ளதா?

தற்போது இதை செயல்படுத்துவதில் பெரிய சவால்கள் எதுவும் இல்லை. அதன் அமைப்பில் தாமதம் என்பது ஒரு சிறிய கவலை, ஆனால் குழு அமைக்கப்பட்டவுடன், இவை அனைத்தும் சீரான செயல்பாட்டிற்கு வந்துவிடும். 

7. Dearness Allowance Merger: அகவிலைப்படி இணைப்பு

அகவிலைப்படி அல்லது இடைக்கால நிவாரணத்தை இணைப்பதற்கான கோரிக்கை குறித்து அரசாங்கம் என்ன கூறியது?
இதுவரை இது குறித்து அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ பதில் எதுவும் இல்லை. ஏனெனில் ஊதியக்குழு அமைக்கப்பட்டவுடன்தான் இது குறித்து தீர்மானிக்கப்படும். நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை (DoE) மற்றும் DoPPW ஆகியவற்றின் வலைத்தளங்களில் அதன் அதிகாரப்பூர்வத் தகவலைக் காணலாம்.

8. 8வது ஊதியக்குழு உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள முக்கிய நிறுவனங்கள் யாவை?

இதில் முக்கியமாக ஊழியர்கள் தரப்பில் இருந்து DoPT, DoE, நிதி அமைச்சகம் மற்றும் NC-JCM (பணியாளர் தரப்பு) ஆகியவை அடங்கும். ஜனவரி 2025 இல் 8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது. அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும்.

9 அரியர் தொகை: Arrears 

8வது ஊதியக்குழு அமலாக்கத்தில் தாமதம் ஏற்படுமா? இதற்கான சாத்தியக்கூறு மிகக் குறைவு. அமலாக்கத்தில் தாமதம் ஏற்பட்டாலும், ஜனவரி 1, 2026 முதல் 8வது ஊதியக்குழுவிற்கான அரியர் தொகை அளிக்கப்படும்.

10 இதில் இதுவரை என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன?

இதுவரை, DoPT மற்றும் NC-JCM இடையே அதன் விதிமுறைகள் குறித்து சில சந்திப்புகள் நடந்துள்ளன. கமிஷனுக்கான குரு உறுப்பினர்களை நியமிப்பதற்கான சுற்றறிக்கைகளையும் DoE சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இருப்பினும், தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

11. Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எவ்வளவு இருக்கும்?

7வது சம்பளக் குழுவில், 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலம் அடிப்படை சம்பளம் ரூ.7,000 இலிருந்து ரூ.18,000 ஆக அதிகரித்தது. 8வது சம்பளக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 - 2.86 என்ற வரம்பில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

12. Salary Hike: சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என வைத்துக்கொள்வோம். பல்வேறு ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என இங்கே காணலாம்.  

- 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.34,560
- 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.37,440 
- 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.41,040 
- 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.46,260  
- 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.51,480

13 Pension Hike: ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலம,ஒரு ஓய்வூதியதாரர் அடிப்படை ஓய்வூதியமாக ரூ.30,000 பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். 1.92, 2.08, 2.28 அல்லது 2.57 ஆக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட்டால், தித்தப்பட்ட ஓய்வூதியம் என்னவாக இருக்கும் என இங்கே காணலாம். 

- 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.57,600 
- 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.62,400
- 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.68,400
- 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.77,100

15. அகவிலைப்படி (DA) மீண்டும் பூஜ்ஜியமாக மாறுமா?

ஆம், கடந்த 10 ஆண்டுகளில் பெறப்பட்ட அனைத்து அகவிலைப்படியும் புதிய சம்பளத்தில் இணைக்கப்பட்டு, பின்னர் அகவிலைப்படி எண்ணிக்கை மீண்டும் 0% இலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

16. ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன?

இது ஒரு பெருக்கி. தற்போதைய அடிப்படை சம்பளம் ஃபிட்மென்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை சம்பளம் உருவாக்கப்படுகின்றது. இதன் மூலம் சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் வருகிறது.

17 Pensioners: ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் என்ன தாக்கம் ஏற்படும்?

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் சம்பளம் பெறுபவர்களைப் போலவே சலுகைகளைப் பெறுவார்கள். அவர்களின் ஓய்வூதியமும் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் திருத்தப்படும். மேலும், ஓய்வூதிய சலுகைகளிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

18. 2026 க்கு முன்னும் பின்னும் ஓய்வு பெறுபவர்களின் ஓய்வூதியத்தில் வேறுபாடு இருக்குமா?

7 வது ஊதியக் குழுவின் போது நடந்தது போல் சில பிரச்சனைகள் எழலாம். ஆனால் 8 வது ஊதியக் குழு இந்த விஷயங்களைக் கவனித்து அதன் அறிக்கையில் ஒரு தீர்வை பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

19. இதனால் எத்தனை மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்?

8வது ஊதியக் குழுவால் சுமார் ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

20. மாநில அரசு ஊழியர்களும் பயனடைவார்களா?

பொதுவாக ஊதியக்குழுக்களில் மத்திய அரசை மாநில அரசுகளும் பின்பற்றுகின்றன. மாநில அரசுகளும் இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டால், லட்சக்கணக்கான ஊழியர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். 

மேலும் படிக்க | Mutual Fund: 28% முதல் 34% வரை வருமானம் தந்த டாப் 6 மியூச்சுவல் பண்டுகள் இவை தான்

மேலும் படிக்க | PM Kisan 20வது தவணை இன்று வருகிறதா? முக்கிய அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More