Home> Business
Advertisement

8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட், கம்யூட்டேஷன் பென்ஷன் விதிகளில் மாற்றம்

8th Pay Commission: ஓய்வூதியதாரர்களுக்கு பல வகையான நற்செய்திகள் காத்திருக்கின்றன. இவற்றின் மூலம் அவர்களுக்கு ஓய்வூதிய உயர்வுடன் பல சலுகைகளும் கிடைக்கவுள்ளன. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட், கம்யூட்டேஷன் பென்ஷன் விதிகளில் மாற்றம்

8th Pay Commission Commuted Pension: ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உட்பட பல வித அதிகரிப்புகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஓய்வூதியதாரர்களுக்கும் பல வகையான நற்செய்திகள் காத்திருக்கின்றன. இவற்றின் மூலம் அவர்களுக்கு ஓய்வூதிய உயர்வுடன் பல சலுகைகளும் கிடைக்கவுள்ளன. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Commuted Pension: ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய விதிகளில் மாற்றம்?

கம்யூடட் ஓய்வூதுயத்தை மீட்டெடுப்பதற்கான கால அளவை 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இந்த முறை இதற்கு ஒப்புதல் கிடைக்கலாம் என நம்பப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அமைப்பான தேசிய கவுன்சிலின் (JCM) ஊழியர்கள் தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பட்டியலிலும் இந்தக் கோரிக்கை இடம்பெற்றுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறன. 

Terms of Reference: குறிப்பு விதிமுறைகளிலும் இது உள்ளதா?

இந்த முக்கிய கோரிக்கை 8வது மத்திய ஊதியக் குழுவின் குறிப்பு விதிமுறைகளின் (ToR) ஒரு பகுதியாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால், அது லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும்.

What is Commuted Pension: ஓய்வூதிய மாற்றம் என்றால் என்ன?

ஓய்வு பெறும் நேரத்தில், ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாகப் பெறுவதற்கான விருப்பம் உள்ளது. இது கம்யுடேஷன் ஆஃப் பென்ஷன் என அழைக்கப்படுகிறது. இருப்பினும், ஊழியர் ஓய்வூதிய மாற்றத்தைத் தேர்வுசெய்தால், அரசாங்கம் அதற்கு ஈடாக, அவரது ஓய்வூதியத்தின் ஒரு பகுதியைக் கழித்து 15 வருட காலத்தில் அந்த தொகையை மீட்டெடுக்கிறது. அதன் பிறகு, ஊழியர் முழு ஓய்வூதியத்திற்கு உரிமையுடையர் ஆகிறார்.

Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் கோரிக்கை

இப்போது, ​​ஓய்வூதியதாரர்கள் இந்தக் காலகட்டத்தை 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஏனெனில் 15 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம் என்றும், இது நிதி ரீதியாக நியாயமற்றது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். வட்டி விகிதங்கள் குறைந்துவிட்டதால், அரசாங்கம் ஓய்வூதிய வசூலைக் கணக்கிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்கள் சரியான ஓய்வூதியத்தில் கணிசமான பகுதியை இழக்க நேரிடுகிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

மீட்பு காலம் 12 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டால், ஓய்வு பெற்றவர்கள் தங்கள் முழு ஓய்வூதியத்தையும் விரைவில் பெறுவார்கள். இது அவர்களின் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளுக்கு மத்தியில் ஒரு முக்கியமான நிவாரணமாக இருக்கும்.

Finance Ministry: மாற்றப்படும் ஓய்வூதியம் குறித்த நிதித்துறை கூறியது என்ன?

11 மார்ச் 2025 அன்று நடைபெற்ற SCOVA கூட்டத்தில், கம்யூடட் பென்ஷம் அதாவது மாற்றப்பட்ட ஓய்வூதியம் குறித்த பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது நிதித்துறை இதை 8வது ஊதியக் குழுவின் குறிப்பு விதிமுறைகளில் (ToR) சேர்க்கலாம் என்று தெரிவித்திருந்தது. ஆகையால் 8வது ஊதியக் குழுவில் இது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என நம்பப்படுகின்றது.

8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்தில் ஏற்படும் தாமதம்

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 31, 2025 வரை அமலில் இருக்கும். பொதுவாக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக் கமிஷன் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அகையால், ஜனவரி 1, 2026 முதல் 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால், இன்னும் இதற்கான குழுவே அமைக்கப்படவில்லை. 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்தில் பல்வேறு நிலைகளில் தாமதம் உள்ளது. அரசாங்கம் இன்னும் குழு உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்கவில்லை, குறிப்பு விதிமுறைகளையும் (ToR) இறுதி செய்யவில்லை. இந்த தாமதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே பதற்றத்தை அதிகரித்து, பல்வேறு ஊகங்களுக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் வழிவகுத்துள்ளது.

மேலும் படிக்க | PM Kisan 20வது தவணை: இதை செய்வது மிக அவசியம், அரசின் முக்கிய அப்டேட்

மேலும் படிக்க | SSY முதல் PPF வரை... அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More