Home> Business
Advertisement

SCSS: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், 5 ஆண்டுகளில் 24 லட்சத்தை அள்ளித்தரும் அருமையான திட்டம்

SCSS Latest News: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒரு அரசாங்கத் திட்டமாகும். ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைத் திட்டமிடுவதற்கான சிறந்த முதலீடுகளில் ஒன்றாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது.

SCSS: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், 5 ஆண்டுகளில் 24 லட்சத்தை அள்ளித்தரும் அருமையான திட்டம்

Senior Citizens Savings Scheme: கடந்த சில மாதங்களாக, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக பலர் பாதுகாப்பான முதலீட்டு பாதையை ஏற்றுக்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், குறிப்பாக மூத்த குடிமக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான ஒரு திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கு நல்ல வருமானத்தையும் அளித்து, பாதுகாப்பிற்கு உத்தரவாதத்தையும் அளிக்கும் திட்டம்தான் மூத்த குடிமக்கள் சேப்புத் திட்டம். 

மூத்த குடிமக்கள் சேப்புத் திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒரு அரசாங்கத் திட்டமாகும். ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைத் திட்டமிடுவதற்கான சிறந்த முதலீடுகளில் ஒன்றாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது.

Senior Citizens: மூத்த குடிமக்களுக்கு ஏற்ற கவர்ச்சிகரமான திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஓய்வு பெற்றவர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குகிறது. மேலும், இந்தத் திட்டத்தில் நீங்கள் ஆபத்து இல்லாமல் முதலீடு செய்யலாம். அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்தத் திட்டம் சிறு சேமிப்புத் திட்டங்களில் அதிக வட்டியை வழங்குகிறது. இது தங்கள் சேமிப்பை அதிகரிக்க விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக அமைகிறது.

Interest Rate: இதன் வட்டி விகிதம் எவ்வளவு?

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 8.2% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. SCSS மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதிய நிதியைப் பாதுகாக்கவும், நிலையான வருமானத்தைப் பெறவும் உதவுகிறது. இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? இதன் பிரத்யேக நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

மூத்த குடிமக்கள் தனித்தனியாகவோ அல்லது தங்கள் வாழ்க்கைத் துணைவர்களுடன் கூட்டாகவோ SCSS கணக்குகளைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கணக்கிலும் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம், குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம். ரூ.1 லட்சம் வரையிலான வைப்புத்தொகையை ரொக்கமாக டெபாசிட் செய்யலாம். ரூ.1 லட்சத்திற்கு மேல் உள்ள தொகையை காசோலை மூலம் செலுத்த வேண்டும்.

SCSS மூலம் ரூ.24 லட்சம் சம்பாதிப்பது எப்படி

- ஓய்வு பெற்ற தம்பதிகள் தனித்தனி SCSS கணக்குகளைத் திறப்பதன் மூலம் அதிகபட்ச நன்மையைப் பெறலாம்.

- இது அவர்களின் முதலீட்டு வரம்பை ரூ.60 லட்சமாக இரட்டிப்பாக்கும். 

- இது காலாண்டு வட்டியாக ரூ.1,20,300 -ஐ வழங்கும். 

- அதே நேரத்தில், ஆண்டு அடிப்படையில் வட்டியிலிருந்து மட்டும் ரூ.4,81,200 வருமானம் கிடைக்கும். 

- இதேபோல், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும் போது, ​​ரூ.24,06,000 மொத்த வட்டி கிடைக்கும். 

- அதாவது, இரண்டு கணக்குகளின் கீழ் ரூ.60 லட்சம் முதலீடு செய்த பிறகு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.24 லட்சம் வட்டியாகப் பெறலாம்.

SCSS: இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

High returns: அதிக வருமானம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது செல்வமகள் சேமிப்பித் திட்டம் உட்பட அனைத்து சிறு சேமிப்புத் திட்டங்களிலும் அதிக வட்டியை அளிக்கிறது.

Tax benefits: வரிச் சலுகைகள்: 

இந்த திட்டத்தின் வைப்புத்தொகைகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளுக்குத் தகுதியுடையவை. இது கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் சேமிப்பை வழங்குகிறது.

Safety: பாதுகாப்பு

இந்த அரசாங்க ஆதரவு திட்டம் வைப்புத்தொகைகளுக்கு 100% பாதுகாப்பை உறுதி செய்கிறது.

மேலும் படிக்க | New ITR Rules: பழைய வரி முறையில் ITR தாக்கல் செய்யும் நபரா நீங்கள்? இதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்

மேலும் படிக்க | குழந்தைகளின் உயர்கல்வி செலவு கவலையை போக்கும்... சில சிறந்த முதலீட்டு திட்டங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More