CGHS New Changes: மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் வரும் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சுகாதார அமைச்சகம் சமீபத்தில் ஒரு புதிய HMIS போர்டல் மற்றும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயனாளிகள் இப்போது வீட்டிலிருந்தே மருத்துவரை சந்திக்க முன்பதிவு செய்யலாம், மின் அட்டைகளைப் பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் மருத்துவ சேவைகளைப் பெறலாம்.
Central Government Health Scheme
CGHS -இல் செய்யப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பயனளிக்கும். இந்த மாற்றங்கள் CGHS சேவையை முன்பை விட எளிமையாகவும், பாதுகாப்பாகவும், நம்பகமானதாகவும் மாற்றியுள்ளன.
Central Government Employees
CGHS இல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான சில முக்கியமான அம்சங்கள் பற்றி இங்கே காணலாம். இவை அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். CGHS -இல் சமீபத்தில் செய்யபட்டுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன? அவற்றால் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்கவுள்ள நன்மைக்ள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
HMIS portal, Mobile App: HMIS போர்டல் மற்றும் மொபைல் செயலி தொடங்கப்பட்டன
சுகாதார அமைச்சகம் சமீபத்தில் ஒரு புதிய HMIS (சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு) போர்ட்டலையும் CGHS-க்கான பயனர் நட்பு மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது மக்கள் மொபைல் மூலமாகவே மின் அட்டைகளைப் பதிவிறக்கம் செய்யலாம், மருத்துவருடனான சந்திப்புகளை முன்பதிவு செய்யலாம்.
PAN-based Unique ID: PAN அடிப்படையிலான தனித்துவமான ஐடி
அனைத்து CGHS பயனாளிக்கும் இப்போது ஆதார் போன்ற PAN உடன் இணைக்கப்பட்ட தனித்துவமான CGHS ஐடி வழங்கப்படும். இது அனைத்து பதிவுகளையும் ஒரே இடத்தில் வைத்திருக்கும். மேலும் மோசடிக்கான வாய்ப்புகளும் குறைக்கப்படும்.
Digital Payment System: டிஜிட்டல் கட்டண முறை
இப்போது பழைய பாரத்கோஷ் (Bharatkosh) போர்டல் மூடப்பட்டுள்ளது. CGHS சந்தா அல்லது புதுப்பித்தல் கட்டணங்களை இப்போது புதிய HMIS போர்ட்டலில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். மேலும் கட்டணம் உடனடியாக சரிபார்க்கப்படும்.
Online Approval for Life Saving Machines: இந்த இயந்திரங்களுக்கு ஆன்லைன் ஒப்புதல் கிடைக்கும்
முன்னர், ஆக்ஸிஜன் செறிவு, CPAP, BiPAP போன்ற உயிர்காக்கும் இயந்திரங்களைப் பெற, ஒருவர் பல முறை ஆவணங்களைச் சமர்ப்பித்து ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது இந்த அனைத்து சாதனங்களுக்கும் ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் ஒப்புதல் வசதி தொடங்கியுள்ளது. இரவில் சுவாசிப்பதில் சிரமம் உள்ள சிஜிஎஜ்எஸ் அட்டைதாரர்கள் (CGHS Cardholders) இப்போது 20 நாட்களுக்குப் பதிலாக 5 நாட்களில் வீட்டிலிருந்தே BiPAP-க்கு ஒப்புதல் பெறலாம்.
EMail and Messages: மின்னஞ்சல் மற்றும் செய்திகள் மூலம் புதுப்பிப்புகள் அனுப்பப்படும்
அனைத்து விதமான விண்ணப்பங்கள், ஒப்புதல் அல்லது கட்டண சரிபார்ப்பு பற்றிய தகவல்களையும் மின்னஞ்சல் மற்றும் செய்தி மூலம் இப்போது ஊழியர்கள் பெறுவார்கள்.
CGHS Beneficiaries: மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் பயனாளிகள் இந்த முக்கியமான பணியை இப்போதே செய்ய வேண்டும்
– முதலில் புதிய போர்ட்டலில் லாக் இன் செய்து அதை PAN உடன் இணைக்கவும்.
– மொபைல் செயலியை நிறுவவும்.
– புதுப்பிப்புகளைப் பெற மின்னஞ்சல் அலர்ட்களை ஆன் செய்யவும்.
Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது
நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், CGHS -இன் திறனை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல வித மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் படிக்க | தொழிலபதிராக விரும்பும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ