EPFO Interest: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. இந்திய அரசின் நிதி அமைச்சகம், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 2024-25 நிதியாண்டிற்கு 8.25 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதற்கு நிதி அமைச்சகம் மே மாதம் ஒப்புதல் அளித்தது.
EPF Members: வட்டித்தொகைக்காக காத்திருக்கும் இபிஎஃப் உறுப்பினர்கள்
நிதி அமைச்சக ஒப்புதலுக்கு பிறகு, இப்போது அனைவரும் வட்டித் தொகைக்காகக் காத்திருக்கிறார்கள். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும், EPFO வட்டித் தொகையை இபிஎஃப் கணக்கிற்கு அனுப்பும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், EPFO இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் அல்லது SMS -ஐயும் அனுப்பவில்லை. சமூக ஊடக தளமான X மூலமாகவும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இபிஎஃப் உறுப்பினர்களின் கணக்கில் நேரடியாக வட்டித் தொகை டெபாசிட் செய்யப்படுகிறது. EPFOவின் கடன் மற்றும் பங்கு முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது.
EPFO Interest Rate: இபிஎஃப்ஓ வட்டி விகிதம்
- ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2024-25 நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் 8.25 சதவீதமாக வைத்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் ஏழு கோடிக்கும் மேற்பட்ட இபிஎஃப் உறுப்பினர்கள் பயனடைவார்கள்.
- 2023-24 நிதியாண்டில், வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை EPFO 8.25 சதவீதமாக நிர்ணயித்தது. இது 2022-23 இல் இருந்த 8.15 சதவீதத்தை விட அதிகமாகும்.
- முன்னதாக, EPF வட்டி விகிதம் 2021-22 இல் 8.10 சதவீதம், 2020-21 -இல் 8.5%, 2018-19 இல் 8.65% மற்றும் 2017-18 இல் 8.55 சதவீதம் ஆக இருந்தது.
EPF Balance: இந்த 4 வழிகளில் இபிஎஃப் இருப்பை செக் செய்யலாம்
- Umang APP: உங்கள் தொலைபேசியில் UMANG செயலியை நிறுவவும். இப்போது செயலியைத் திறந்து அதில் லாக் இன் செய்யவும். இதற்குப் பிறகு ‘EPFO Option’ என்பதைக் கிளிக் செய்து ‘Employee Centric Services’ என்பதற்குச் செல்லவும். இப்போது ‘view passbook’ என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு UAN எண்ணை உள்ளிட வேண்டும். அதன் பிறகு உங்கள் மொபைல் எண்ணில் OTP வரும். OTP ஐ உள்ளிட்ட பிறகு, PF கணக்கு லாக் இன் ஆகும். இப்போது நீங்கள் PF பாஸ்புக்கைக் காணலாம்.
- SMS: EPFO-வில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS மூலம் PF இருப்பை அறிய, EPFO UAN LAN (மொழி) என டைப் செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் தகவல் வேண்டுமென்றால், LAN என்பதற்கு பதிலாக ENG என்று எழுதுங்கள். தமிழில் தகவலுக்கு, LAN என்பதற்கு பதிலாக TAM என்று எழுத வேண்டும்.
- Missed Call: இந்த முறைகளைத் தவிர, மிஸ்டு கால் கொடுத்தும் இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளலாம். இதற்கு, உங்கள் UAN பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். உங்கள் புதிய பங்களிப்பு மற்றும் இருப்பு விவரங்களுடன் இங்கே ஒரு SMS வரும்.
- EPFO Portal: முதலில் இணையதளத்தில் லாக் இன் செய்து இ-பாஸ்புக்கைக் கிளிக் செய்யவும். இ-பாஸ்புக்கைக் கிளிக் செய்யும்போது, ஒரு புதிய பக்கம் திறக்கும். உங்கள் பயனர்பெயர் (UAN எண்), கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவை நிரப்ப வேண்டும். பின்னர் ஒரு புதிய பக்கம் திறக்கும். இங்கே நீங்கள் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கே உங்கள் EPF இருப்பை மின்-பாஸ்புக்கில் காணலாம்.
மேலும் படிக்க | PM Kisan: வருகிறது 20வது தவணை, பயனாளிகள் பட்டியலை செக் செய்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ