Home> Business
Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: GPF வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது

GPF Interest Rate: மத்திய அரசு ஊழியர்களுக்கான GPF வட்டி விகிதம் ஜூலை-செப்டம்பர் 2025 காலாண்டில் 7.1% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: GPF வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது

Central Government Employees: ஜூலை-செப்டம்பர் 2025க்கான பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மற்றும் பிற தொடர்புடைய வருங்கால வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான GPF வட்டி விகிதம் ஜூலை-செப்டம்பர் 2025 காலாண்டில் 7.1% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

General Provident Fund

பொருளாதார விவகாரத் துறை (DEA) வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த விகிதம் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30, 2025 வரை பொருந்தும். நிதி அமைச்சகம் ஒவ்வொரு காலாண்டிலும் GPF வட்டி விகிதத்தை மதிப்பாய்வு செய்கிறது என்பது குறிப்பிட்டத்தக்கது. கடந்த காலாண்டிலும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த நிதிகளுக்கும் வட்டி விகிதம் பொருந்தும்

இந்த வட்டி விகிதம் பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்), பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி (இந்தியா), அகில இந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி, மாநில ரயில்வே வருங்கால வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்), இந்திய ராணுவத் துறை வருங்கால வைப்பு நிதி, இந்திய ராணுவத் தொழிற்சாலைகள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, இந்திய கடற்படை கப்பல்துறை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, பாதுகாப்பு சேவைகள் அதிகாரிகள் வருங்கால வைப்பு நிதி, ஆயுதப்படை பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றிற்கும் பொருந்தும். இந்த நிதிகள் பல்வேறு அரசுத் துறைகளால் பராமரிக்கப்படுகின்றன, அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கின்றன. அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை இந்தத் திட்டங்களில் தவறாமல் டெபாசிட் செய்கிறார்கள்.

Public Provident Fund: PPF போலவே இதன் வட்டி விகிதம்  உள்ளது

GPF வட்டி விகிதம் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) விகிதமான 7.1% போலவே இருந்தாலும், இதில் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. PPF சுயதொழில் செய்பவர்கள் உட்பட அனைத்து இந்திய குடிமக்களுக்குமானது. இது 15 ஆண்டுகள் லாக் இன் காலத்தையும் கொண்டுள்ளது. இதற்கு மாறாக, GPF என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மேலும் ஓய்வு பெற்றவுடன் இதை முழுமையாக திரும்பப் பெற அனுமதி கிடைக்கிறது.

Employee Provident Fund: ஊழியர் வருங்கால வைப்பு நிதி 

இது தவிர, ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நடத்தப்படும் ஒரு திட்டமாகும். இது முக்கியமாக தனியார் துறையின் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கானது. இதன் வட்டி விகிதம் EPFO ​​ஆல் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. தற்போது இதன் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உள்ளது. EPF, PPF மற்றும் GPF என இந்த இரண்டிலிருந்தும் வேறுபட்டது.

மேலும் படிக்க | SBI Mutual Fund: 16.45% ஆண்டு வருமானத்துடன் ரூ.1 லட்சம் முதலீட்டில்.. ரூ.1.35 கோடி கார்பஸ்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: HRA அதிரடி ஏற்றம்.... லெவல் 1-7, யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More