PMAY Scheme Application Date Extended: சொந்த வீடு கட்டுவது என்பது இந்தியாவில் நடுத்தர மக்களின் வாழ்நாள் கனவு என சொல்லலாம். தங்கள் தலைக்கு மேல் இருக்கும் கூரை தங்களுக்கு சொந்தமானது என்பதே நிறைவான உணர்வை தரும் என்பது பலரின் பார்வையாக இருக்கிறது.
வீடு கட்டுவது என்பது சாதாரணமானதில்லை. பிரச்னையில்லாத நிலத்தை முதலில் வாங்க வேண்டும். அதில் நீங்கள் வீடு கட்டி குடியேறும் சௌகரியம் இருக்க வேண்டும். அதன்பின் வீட்டின் கட்டுமானப் பணி தொடங்கி, அதை நிறைவு செய்வதற்குள் எக்கச்சக்க பாடங்களை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். ஆனால் இவை அனைத்திற்கும் உங்களின் கைகளில் பணம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
எனவேதான், பலரும் வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கி அதனை மாதந்தோறும் தவணை மூலம் செலுத்துகின்றனர். வீட்டுக்கடன் என்பது பொதுமக்கள் வாங்கும் மற்ற வங்கிக் கடன்களை போல் இல்லாமல் நீண்ட காலம் செலுத்தக்கூடிய கடனாகும். அதை வங்கிகளில் இருந்து பெறுவதும் அவ்வளவு எளிது கிடையாது, அதை திருப்பிச் செலுத்துவதும் அவ்வளவு எளிதில்லை. நடுத்தர மக்களுக்கே வீடு கட்டுவதில் இவ்வளவு நெருக்கடி இருக்கும்போது பாமர மக்களுக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை.
PMAY Scheme: கோடிக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்
பாமர மக்களுக்கு வீடு கட்டுவதற்கு முதல் பிரச்னையே பணமாக தான் இருக்கும். இந்நிலையில், மத்திய அரசு பாமர மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதியுதவி அளிக்கும் வகையில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.
நீங்களும் வீடு கட்டும் யோசனையில் இருந்தால், இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் சமீபத்தில், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு விதித்திருந்த காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்திருக்கிறது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதையும் இங்கு காணலாம்.
PMAY Scheme: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு
முதலில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க மே 15ஆம் தேதியே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தேதி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது 2025ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதிவரை நீங்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். அதாவது, சுமார் ஏழரை மாதங்கள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இத்திட்டத்தில் விண்ணபிக்க சில தகுதிகளும் வேண்டும். நீங்கள் அந்த தகுதிகளை பெற்றிருந்தால் மட்டுமே உங்களால் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். முதலில் உங்களுக்கு சொந்த வீடு இருக்கவே கூடாது.
PMAY Scheme: விண்ணப்பிப்பது எப்படி?
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் விண்ணப்பிக்க PMAY-G இணையத்தளத்திற்கு செல்லவும். அங்கு விண்ணப்பித்தில் கேட்கப்பட்டிருக்கும் உங்களை பற்றி தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும். தொடர்ந்து, ஒப்புதல் படிவத்தை (Consent Form) பதிவேற்றம் செய்யவும். அதன்பின்னர், Search என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அதன் பின் உங்களது பெயரை தேர்வு செய்து, Select to Register என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். தொடர்ந்து வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிடவும். ஆதார் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அட்டை, உங்களிடம் சொந்த வீடு இல்லை என்பதற்கான உறுதிமொழிப் பத்திரம் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். உங்களது ஆவணங்களை அரசு தரப்பில் சரிபார்ப்பார்கள். அதன்பிறகே விண்ணப்பம் ஏற்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ