Home> Business
Advertisement

LPG சிலிண்டர் விலை குறைந்தது: ஜூலை முதல் நாளே வந்த குட் நியூஸ், லேட்டஸ்ட் விலை இதோ

LPG Cylinder Price: சாமானிய மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை அளிக்கும் வகையில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளன.

LPG சிலிண்டர் விலை குறைந்தது: ஜூலை முதல் நாளே வந்த குட் நியூஸ், லேட்டஸ்ட் விலை இதோ

LPG Gas Cylinder Rate: ஜூலை மாதம் முதல் நாளிலேயே மக்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. சாமானிய மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை அளிக்கும் வகையில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளன. 

ஜூலை 1 முதல், எண்ணெய் நிறுவனங்கள் 19 கிலோ வணிக எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.58.50 வரை குறைத்துள்ளன. இப்போது நாட்டின் தலைநகரான டெல்லியில் அதன் புதிய விலை சிலிண்டருக்கு ரூ.1,665 ஆக மாறியுள்ளது. இந்த குறைப்பு, குறிப்பாக அன்றாட வேலைகளில் இந்த சிலிண்டரைப் பயன்படுத்தும் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நிவாரணத்தை அளித்துள்ளது.

LPG Commercial Cylinder: வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை

கடந்த சில மாதங்களில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வணிக எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில், அதன் விலை ரூ.24 குறைந்தது. முன்னதாக, மே 2025 இல், வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.17 மற்றும் ஏப்ரல் 2025 இல் ரூ.44.5 குறைக்கப்பட்டது. பிப்ரவரி 2025 இல் ரூ.7 இதன் விலை குறைக்கப்பட்டது. எனினும் மார்ச் மாதத்தில் விலை ரூ.6 அதிகரித்தது.

பல்வேறு முக்கிய நகரங்களில் புதிய எல்பிஜி சிலிண்டர் விலைகளை பற்றி காணலாம்

விலை குறைப்புக்குப் பிறகு, 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டருக்கு இனி எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என இங்கே காணலாம். 

சென்னையில்  வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.58 குறைந்து ரூ.1823 ஆக உள்ளது.
டெல்லியில் 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.58.5 குறைந்து ரூ.1665 ஆக உள்ளது. 
மும்பையில் அதன் விலை ரூ.58.5 குறைந்து ரூ.1616 ஆக உள்ளது. 
கொல்கத்தாவில், ரூ.57 குறியந்து தற்போது விலை ரூ.1769 ஆக உள்ளது.

LPG Domestic Cylinder: வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை

இருப்பினும், சாதாரண மக்களுக்கான 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை அப்படியே இருக்கும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெளிவாகக் கூறியுள்ளன. எனினும், இதன் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறனர். இந்தியாவில் எல்பிஜி நுகர்வில் சுமார் 90% வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் வணிக, தொழில்துறை மற்றும் வாகனத் துறைகளில் 10% மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வீட்டு உபயோக எல்பிஜி இணைப்புகள் இரட்டிப்பாகியுள்ளன. ஏப்ரல் 2025 வாக்கில், அவற்றின் எண்ணிக்கை சுமார் 33 கோடியை எட்டியுள்ளது.

கச்சா எண்ணெய் விலைகளின் தாக்கம்

LPG கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படுவதால் LPG விலைகள் நேரடியாக கச்சா எண்ணெயுடன் தொடர்புடையவை. மே 2025 இல், இந்தியாவின் கச்சா எண்ணெயின் சராசரி விலை பீப்பாய்க்கு $64.5 ஆக இருந்தது, இது 3 ஆண்டுகளில் மிகக் குறைவு. இது LPG விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை 45% வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், சமீபத்திய ஈரான்-இஸ்ரேல் மோதல்கள் காரணமாக, எண்ணெய் விலைகள் 21–25% உயர்ந்துள்ளன. இது LPG விகிதங்களை நிர்ணயிப்பதை பாதிக்கிறது. இந்த சர்வதேச விலைகளின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் விகிதங்களை மாற்றுகின்றன.

மேலும் படிக்க | Mutual Fund: கடந்த 5 ஆண்டுகளில் 38% வரை வருமானம் தந்த 5 ஸ்டார் மியூச்சுவல் ஃபண்டுகள் இவை தான்

மேலும் படிக்க | பணக்காரர் ஆவது எளிது... பங்குச் சந்தையின் தந்தை Warren Buffet அளிக்கும்... முதலீட்டு டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More