EPFO Latest News: 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒரு புதிய படிவத்தை வெளியிட்டுள்ளது. அனைத்து ஓய்வூதியதாரர்களும் இந்த படிவத்தை ஜூலை 28, 2025 க்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் ஓய்வூதிய சலுகைகளை இழக்க நேரிடும்' என்று சமீபத்தில் பல அறிக்கைகள் வந்தன. இருப்பினும், இவை போலியானவை என்று பின்னர் கண்டறியப்பட்டது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக வந்த கூற்றுக்களை பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவு மறுத்துள்ளது. ஜூலை 28, 2025 க்குள் "புதிய EPFO படிவத்தை" சமர்ப்பிக்கத் தவறினால் ஓய்வூதிய சலுகைகள் நிறுத்தி வைக்கப்படலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனால் பல ஓய்வூதியதாரர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள்.
Press Information Bureau’s Fact Check
PIB உண்மை சரிபார்ப்பு தளத்தின் படி, EPFO அப்படி எந்த புதிய படிவத்தையும் வெளியிடவில்லை. மேலும் அத்தகைய படிவத்தை சமர்ப்பிக்காவிட்டால், ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று அச்சுறுத்தும் எந்த உத்தரவையும் EPFO வெளியிடவில்லை.
"ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் அவசர அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஜூலை 28, 2025 க்குள் தேவையான புதிய EPFO படிவத்தை சமர்ப்பிக்கத் தவறினால் அவர்களின் ஓய்வூதிய சலுகைகள் இடைநிறுத்தப்படலாம் என்று அறிவிப்பு எச்சரித்துள்ளது. இந்தக் கூற்று போலியானது," என்று PIB உண்மைச் சரிபார்ப்பு தளம் X இல் பதிவிட்டுள்ளது.
It is being claimed in a news article that Employees Provident Fund Organisation (EPFO) issued an urgent notice to all pensioners, warning them that their pension benefits may be suspended if they fail to submit the required new EPFO form by 28 July 2025.#PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) June 26, 2025
… pic.twitter.com/gAIfAk48Pr
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக வந்த கூற்றுக்களை பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவு மறுத்துள்ளது.
"ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் இதுபோன்ற புதிய EPFO படிவம் எதுவும் வழங்கப்படவில்லை," என்று PIB X இல் கூறியுள்ளது. குடிமக்கள் தவறான தகவல்களால் இன்னல்களுக்கு ஆளாகாமல் இருக்க வலியுறுத்தப்படுகிறது," என்று பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்கள் அலர்ட்
மேலும் பயனர்கள் எப்போதும் துல்லியமான தகவலுக்கு அதிகாரப்பூர்வ சேனல்களைப் பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, EPFO இலிருந்து வரும் எந்தவொரு புதுப்பிப்புகளும் பொதுவாக அவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக கணக்குகள் மூலம் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிட்டத்தக்கது.
EPFO Auto Settlement Limit
இந்த வார தொடக்கத்தில், EPFO , PF தானியங்கி பணம் எடுக்கும் வரம்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை அறிவித்து. அது ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தினார். EPFO உறுப்பினர்களுக்கு, குறிப்பாக அவசர காலங்களில், இபிஎஃப் நிதி விரைவாக கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
புதிய தானியங்கி தீர்வு முறையில், உறுப்பினர்கள் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் இபிஎஃப் கணக்கில் உள்ள தொகையை எடுக்க விடுக்கும் கோரிக்கை 3 நாட்களில் தானாகவே செயலாக்கப்படும். முன்னதாக, இந்த முறை ரூ. 1 லட்சம் வரையிலான கோரிக்கைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது. இப்போது இதன் வரம்பு 5 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மேம்பாடு லட்சக்கணக்கான சந்தாதாரர்களுக்கு நிவாரணமாக அமையும். அவர்கள் தேவையான நிதியை விரைவாக அணுக இது உதவும் என அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
மேலும் படிக்க | PM Kisan 20வது தவணை எப்போது வருகிறது? பயனாளிகளுக்கு முக்கிய அப்டேட்
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: லெவல் 3 முதல் லெவல் 10 வரை... அகவிலைப்படி, சம்பளம் எவ்வளவு உயரும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ