PM Awas Yojana: அனைத்து வகையான மக்களுக்காகவும் இந்திய அரசாங்கம் பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. அவற்றுள் வீட்டு வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு முக்கியமான திட்டமாகும். இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் உறுதியான வீட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா
இந்தத் திட்டத்தின் கீழ், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு வீட்டு வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டம் வீட்டுவசதிப் பிரச்சினையைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம், மக்கள் தங்கள் கனவு இல்லத்தை கட்ட அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது. பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் யாரெல்லாம் பயன்பெற முடியும்? இந்த திட்டத்தின் நிபந்தனைகள் என்ன? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் என இரண்டு தனித்தனி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களின் முக்கிய நோக்கம் வீடற்ற குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதாகும். இது தவிர, இந்தத் திட்டம் சமூக மற்றும் பொருளாதார நிலையையும் மேம்படுத்துகிறது.
பிஎம் ஆவாஸ் திட்டத்திற்கான தகுதி வரம்புகள் என்ன?
- விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரருக்கு ஏற்கனவே பக்கா வீடு இருக்கக்கூடாது.
- இந்த திட்டத்தில் நகர்ப்புறங்களில் வருமான வரம்புகள் EWS (ரூ.3 லட்சம்), LIG (ரூ.3-6 லட்சம்) மற்றும் MIG (ரூ.6-9 லட்சம்) ஆகும்.
- விண்ணப்பதாரருக்கு செல்லுபடியாகும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்.
பிஎம் ஆவாஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் எவை?
- ஆதார் அட்டை
- பான் கார்டு
- வருமானச் சான்றிதழ்
- வங்கி கணக்கு புத்தகம்
- முகவரிச் சான்று
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- நில ஆவணங்கள் (பொருந்தினால்)
- வேலை செய்யும் மொபைல் எண்
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா: இந்த திட்டத்திற்கு விண்னப்பிப்பது எப்படி?
- முதலில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- "புதிய பதிவு" விருப்பத்தை கிளிக் செய்து தேவையான தகவலை உள்ளிடவும்.
- பதிவு முடிந்ததும் லாக் இன் விவரங்களைப் பெறுவீர்கள்.
- லாக் இன் தகவலைப் பயன்படுத்தி போர்ட்டலில் உள்நுழையவும்.
- தேவையான தகவல்களை கவனமாக நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.
- அனைத்து தகவல்களையும் ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு, படிவத்தை சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, ரசீது அல்லது விண்ணப்பச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாப்பாக வைக்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ