PM Kisan Samman Nidhi Yojana: மத்திய அரசாங்கம் பல தரப்பட்ட மக்களுக்காக பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. விவசாயிகளுக்காக நடத்தப்படும் நலத்திட்டங்களில் மிக முக்கியமான மற்றும் பிரபலமான திட்டமாக இருப்பது பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம். இந்த திட்டம் விவசாயிகளுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
விவசாயிகள் இதுவரை பிஎம் கிசான் திட்டத்தின் 19 தவணைகளை பெற்றுள்ளனர். இப்போது விவசாயிகள் 20வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், இந்த தவணை இன்று வெளியிடப்படலாம் என்ற ஊகங்கள் உள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் அவர் பீகாரில் உள்ள விவசாயிகளின் கணக்குகளுக்கு 20வது தவணையை மாற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் அடுத்த தவணையை வெளியிடுவது குறித்து இதுவரை அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் செய்யப்படவில்லை.
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா
முன்னதாக, 19வது தவணை பிப்ரவரி 24 அன்று விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இதன் மூலம் 9.8 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்தனர். இவர்களில், 2.4 கோடி பெண்களும் இருந்தனர். பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், அரசாங்கம் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கும் ஒரு முறை தலா ரூ.2,000 -ஐ வழங்குகிறது. மொத்தத்தில் 3 தவணைகளில் மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகின்றது.
PM Kisan: பிஎம் கிசான் திட்டத்தின் நோக்கம் என்ன?
விவசாயிகள் தங்கள் விவசாயம் தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்து, வருமானத்தை அதிகரிக்க நிதி உதவி வழங்குவதே பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது.
PM Kisan திட்டத்தின் பலனை பெறுவது எப்படி?
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் பலனைப் பெற, விவசாயிகள் தங்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும். இதைச் செய்ய இரண்டு வழிகள் உள்ளன.
- பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in -க்கு செல்லவும். படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- இது தவிர, உங்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்றோ அல்லது மாநில அரசின் நோடல் அதிகாரியைத் தொடர்பு கொண்டோ இதை செய்யலாம்.
பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- மொபைல் எண்
- வங்கி கணக்கு எண்
- IFSC-MICR குறியீடு
- பெயர் மற்றும் பிறந்த தேதி
தவணை நிலையை எவ்வாறு செக் செய்வது?
விவசாயிகள் தங்கள் தவணையின் நிலையை PM கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று செக் செய்யலாம். இதற்கு, பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படாமல் இருக்க, அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் அட்டை விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும்.
நீங்கள் ஒரு தகுதியான விவசாயியாக இருந்து, உங்கள் ஆவணங்கள் சரியாக இருந்தால், 20வது தவணையின் பலன் உங்கள் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் தகவல்களை சரியான நேரத்தில் புதுப்பித்து, அதிகாரப்பூர்வ போர்ட்டலில் நிலையை தொடர்ந்து சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணையை பெற, விவசாயிகள் சில விஷயங்களை கடிப்பாக செய்துமுடிக்க வேண்டும். eKYC, நிலப் பதிவுகளைச் சரிபார்த்தல், வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைத்தல் மற்றும் NPCI DBT விருப்பத்தை செயல்படுத்துதல் ஆகியவை இற்றில் மிக முக்கியமானவை. இவற்றை செய்து முடித்த விவசாயிகளின் கணக்குகளில்தான் பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணை வரவு வைக்கப்படும். இந்தப் பணிகள் முடிக்கப்படாவிட்டால், உங்கள் தவணை சிக்கிக்கொள்ளக்கூடும். ஆகையால் தவணையை சரியான நேரத்தில் பெற, இந்த பணிகளை உடனடியாக முடிப்பது நல்லது.
மேலும் படிக்க | CGHS புதிய விதிகள்: மத்திய அரசு ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ