Home> Business
Advertisement

PM Kisan 20வது தவணை தவறாமல் கிடைக்க இந்த தவறுகளை உடனே சரிசெய்வது அவசியம்

PM Kisan Latest News: விவசாயிகள் வழங்கிய தகவல்களில் ஏதேனும் தவறு இருந்தால் அல்லது அரசாங்கம் வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதல்களை விவசாயிகள் நிறைவேற்றவில்லை என்றால் அவர்களது தவணை சிக்கிக்கொள்ளலாம்.

PM Kisan 20வது தவணை தவறாமல் கிடைக்க இந்த தவறுகளை உடனே சரிசெய்வது அவசியம்

PM Kisan Samman Nidhi Yojana: இந்த முறை பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 20வது தவணைக்கான விவசாயிகளின் காத்திருப்பு அதிகரித்துள்ளது. பிஎம் கிசானின் அடுத்த தவணை எப்போது வரும் என்பதிலேயே அனைவரது கவனமும் உள்ளது.

PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பிஎம் கிசான் 20வது தவணை ஜூன் மாத இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ வெளியிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. தவணை தாமதமானதால், பயனாளிகள் தங்கள் அனைத்து ஆவணங்களையும் சரியாகச் சரிபார்த்து, தவறுகள் இருந்தால் சரி செய்வதற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும். இப்படி செயவ்தால், எந்த வித பிரச்சனையும் இல்லாமல் தவணை கிடைப்பதை உறுதிசெய்துகொள்ளலாம்.

விவசாயிகள் வழங்கிய தகவல்களில் ஏதேனும் தவறு இருந்தால் அல்லது அரசாங்கம் வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதல்களை விவசாயிகள் நிறைவேற்றவில்லை என்றால் அவர்களது தவணை சிக்கிக்கொள்ளலாம்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா:

பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 19வது தவணை பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. இந்த தவணை கிடைத்து 4 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. PM கிசானின் 17வது தவணை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டது. அக்டோபரில் 18 ஆவது தவணையும், பிப்ரவரியில் 19 ஆவது தவணையும் அளிக்கப்பட்டன. 

தற்போது, ​​தவணை வழங்குவதில் ஏற்படும் தாமதம், தவறுகள் ஏதேனும் இருந்தால், அதை சரி செய்ய நல்ல வாய்ப்பாக கருதப்படுகின்றது. PM Kisan திட்டத்தில் உள்ள பெயர் ஆதாருடன் பொருந்தவில்லை என்றாலோ, வங்கிக் கணக்கு செயலில் இல்லை என்றாலோ, வீட்டு முகவரியை நிரப்புவதில் தவறு இருந்தாலோ, வங்கிக் கணக்கு அல்லது மொபைல் எண்ணின் இலக்கம் தவறாக இருந்தாலோ, அனைத்து விதமான தவறுகளையும் திருத்த தற்போது நேரம் கிடைத்துள்ளது.

PM Kisan திட்டம்: ஆதார் அட்டையின் முக்கிய பங்கு

PM-Kisan திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளில் ரூ.6,000 வழங்கப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டம் ஆதார் அடிப்படையிலான துல்லியமான சரிபார்ப்பைப் பொறுத்தது. PM Kisan பதிவு மற்றும் ஆதார் அட்டையில் பெயரில் ஒரு சிறிய தவறு இருந்தாலும், பணம் செலுத்தப்படுவதில் தாமதம் ஏற்படலாம். ஆதார் மற்றும் பிஎம் கிசானில் உள்ள பெயர் பொருந்தாமல் இருக்கும் இந்த தவறு மிகவும் பொதுவாக பல கணக்குகளில் காணப்படுகிறது.

PM Kisan இல் உள்ள பெயர் ஆதாருடன் பொருந்தவில்லை என்றால் அதை சரி செய்வது எப்படி?

- முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in க்குச் செல்லவும்.

- 'Farmer Corner' என்பதைக் கிளிக் செய்யவும்

- பின்னர் சுய பதிவு செய்யப்பட்ட விவசாயி புதுப்பிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

- உங்கள் ஆதார் எண், கேப்ட்சாவை உள்ளிட்டு சரியான விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

- உங்கள் பெயரை ஆதார் அட்டையில் உள்ளதைப் போலவே உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.

இதேபோல், நீங்கள் ஆஃப்லைன் முறையைத் தேடுகிறீர்களானால், உங்கள் அருகிலுள்ள CSC (பொது சேவை மையம்) அல்லது வேளாண் துறை அலுவலகத்திற்குச் செல்லவும். ஆதார் அட்டை, நிலப் பதிவுகள், வங்கி பாஸ்புக், பிஎம் கிசான் ஐடி போன்ற ஆவணங்களைக் காட்டி பெயரைத் திருத்திக் கொள்ளுங்கள்.

இந்த முக்கியமான பணிகளையும் செய்து முடிக்கவும்

- e KYC: PM கிசான் யோஜனாவில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகள் eKYC செய்து கொள்வது கட்டாயமாகும். இது இல்லாமல், அடுத்த தவணைக்கான பணம் பெறப்படாது.

- Aadhaar Bank Account Linking: வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு மட்டுமே தவணை அனுப்பப்படும்.

- Name: பெயரில் எழுத்துப்பிழை அல்லது வேறு எந்த தவறும் இருக்கக்கூடாது. வங்கி, ஆதார் மற்றும் போர்ட்டலில் பெயர் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

- Land Verification: மாநில அரசால் நிலப் பதிவுகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பது கட்டாயமாகும்.

- Correct Information: மொபைல் எண், வீட்டு முகவரி, வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றில் எந்தத் தவறும் இருக்கக்கூடாது;

- Bank Account: வங்கிக் கணக்கு செயலில் இருக்க வேண்டும், எனவே அது செயலிழக்கப்படவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

- Avoid Duplicity: நகல் உள்ளீடுகளைத் தவிர்க்கவும். ஒரே விவசாயி இரண்டு முறை பதிவு செய்தால் பிஎம் கிசான் நன்மைகள் நிறுத்தப்படும்.

- Aadhaar Card: ஆதாரில் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக இருக்க வேண்டும். பெயர், பிறப்பு மற்றும் பாலினத்தில் எந்தப் பிழையும் இருக்கக்கூடாது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: லெவல் 1 முதல் லெவல் 7 வரை... மெகா ஊதிய உயர்வு எவ்வளவு தெரியுமா?

மேலும் படிக்க | PPF முதலீடு: ரூ.1 கோடி கார்பஸுடன் ... வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.60,000 வரியில்லா ஓய்வூதியம் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More