PM Kisan Samman Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6000 நிதி உதவியைப் பெறுகிறார்கள். இந்தத் தொகை தலா ரூ.2000 வீதம் மூன்று சம தவணைகளாக வழங்கப்படுகின்றது. இந்த தொகை விவசாயிகளுக்கு பல வழிகளில் உதவியாக இருக்கின்றது.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் திட்டத்தின் முந்தைய தவணை, அதாவது 19வது தவணை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசால் வழங்கப்பட்டது. இதற்கு முந்தைய தவணைகளை அரசாங்கம் சுமார் 4 மாத இடைவெளியில் பயனாளி விவசாயிகளின் கணக்குகளுக்கு அனுப்பி வருகிறது. இதன்படி, 20வது தவணையின் நான்கு மாத கணக்கு ஜூன் மாதத்திலேயே தொகை வழங்கப்படும் என்பதை தெளிவாக்குகிறது. ஜூன 20 ஆம் தேதி 20வது தவணை வரவு வைக்கப்படக்கூடும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்படியும், விரைவில், பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் பயனாளிகளின் கணக்குகளில் ரூ.2000 வந்தடையும்.
PM Kisan: விவசாயிகளின் கணக்குகளில் ரூ.2000 எப்போது வரும்
பிரதம மந்திரி நரேந்திர மோடி பிப்ரவரி 2025 இல் பீகாரின் பாகல்பூரில் இருந்து பிரதமர் கிசான் யோஜனாவின் கடைசி தவணையை வெளியிட்டார். இந்த முறையும் அவர் தனது பீகார் சுற்றுப்பயணத்தில், விவசாயிகளுக்கான இந்த திட்டத்தின் கீழ் அடுத்த தவணையாக ரூ.2000 -ஐ வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார். நாடு திரும்பிய பிறகு, அவர் பீகாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி இந்த வாரம் ஜூன் 20 ஆம் தேதி பீகாரில் உள்ள சிவானுக்கு வருகை தருவார் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவரை வரவேற்க மாநிலத்தில் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த முறை பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள 9.88 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணையை பரிசாக வழங்குவார் என்று தெரிகிறது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் தவணையை எந்த வித தடையும் இல்லாமல் பெற, இந்த நான்கு முக்கியமான பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க வெண்டும். ஏனெனில் இதில் ஒரு சிறிய அலட்சியம் காட்டினாலும், இதனால் உங்கள் அடுத்த தவணை தாமதமடையக்கூடும்.
e-KYC கட்டாயம்
PM கிசான் யோஜனாவின் தவணையைப் பெற e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை தங்கள் e-KYC-ஐ முடிக்காத பயனாளிகளின் தவணை நிறுத்தப்படலாம். pmkisan.gov.in இணையதளத்தில் அல்லது அருகிலுள்ள CSC மையத்திற்குச் சென்று e-KYC செய்து முடிகலாம்.
Land Verification: நில சரிபார்ப்பு அவசியம்
விவசாய நிலம் பயனாளி விவசாயியின் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் அதன் பதிவை மாநில அரசின் நிலப் பதிவு அமைப்பில் புதுப்பிக்க வேண்டும். உ.பி., மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விவசாயி பதிவேடு மூலம் நில சரிபார்ப்பு விரைவாக செய்யப்படுகிறது. PM கிசான், கிசான் கிரெடிட் கார்டு உள்ளிட்ட அனைத்து அரசுத் திட்டங்களின் பலனைப் பெற சில மாநிலங்களில் விவசாயி பதிவேடு கட்டாயமாகிவிட்டது. விவசாயி பதிவேட்டிற்குப் பிறகு, 6.1 கோடி விவசாயிகளுக்கு தனித்துவமான விவசாயி ஐடி வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. FY27 -க்குள் இந்த எண்ணிக்கையை 11 கோடியாக எட்டுவதே இலக்கு.
Aadhaar Bank Account Linking: வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்
PM கிசான் தவணை நேரடியாக ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்குச் செல்கிறது. உங்கள் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்படவில்லை அல்லது NPCI இல் மேப் செய்யப்படவில்லை என்றால், தவணையை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். ஆகையால், உடனடியாக அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் சென்று நிலையைச் சரிபார்ப்பது நல்லது.
Status Checking: பயனாளியின் நிலையை போர்ட்டலில் தொடர்ந்து செக் செய்யவும்
சில நேரங்களில் தொழில்நுட்ப அல்லது ஆவணக் காரணங்களால் தவணைகள் சிக்கிக் கொள்ளும். PM கிசான் போர்ட்டலுக்குச் சென்று “Beneficiary Status” மற்றும் “Payment Status” ஆகியவற்றைச் செக் செய்யவும். இப்படி செய்வதன் மூலம், ஏதேனும் பிழை இருந்தால் அதை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு சரி செய்ய முடியும்.
20வது தவணையான ரூ.2,000 -ஐ சரியான நேரத்தில் பெற விரும்பினால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை விரைவில் செய்து முடிப்பது நல்லது. அரசாங்கத்தின் இந்தத் திட்டம் விவசாயிகளின் வருமானத்தில் நிலைத்தன்மையைக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கியமான வழிமுறையாக உள்ளது. இதற்கு தேவையான பணிகளை முன்னரே செய்து முடித்து, இதற்கான ஆவணங்களையும் சரியாக வைத்திருந்தால், தகுதியுள்ள விவசாயிகள் இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | PPF முதலீட்டின் மூலம்... வாழ்நாள் முழுவதும் ரூ.85,000 வரியில்லா ஓய்வூதியம் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ