Home> Business
Advertisement

PM Kisan: வருகிறது 20வது தவணை, பயனாளிகள் பட்டியலை செக் செய்வது எப்படி?

PM Kisan Latest News: ஜூலை மாதத்தில் கலந்துகொள்ள இருக்கும் ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 20வது தவணையை வெளியிடுவார் என கூறப்படுகின்றது.

PM Kisan: வருகிறது 20வது தவணை, பயனாளிகள் பட்டியலை செக் செய்வது எப்படி?

PM Kisan Samman Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் 20வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு விரைவில் விவசாயிகளுக்கு ரூ.2000 வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சில காரணங்களுக்காக பல விவசாயிகளின் பெயர்கள் பயனாளிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், அவர்களுக்குத் திட்டத்தின் தொகை கிடைப்பதில்லை. சில எளிய வழிமுறைகள் மூலம் பயனாளிகளின் பட்டியல் மற்றும் விண்ணப்ப ஒப்புதல் நிலையை சரிபார்க்கலாம்.

PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பிரதமர் மோடி ஜூலை 2025 இல் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் 20வது தவணையை வெளியிடக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இதற்கு முந்தைய (19வது) தவணை பிப்ரவரி 2025 இல் வெளியிடப்பட்டது. பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் தவணை வழக்கமாக பிப்ரவரி, ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரும். 

இந்த ஆண்டும் பிஎம் கிசான் யோஜனாவின் 20வது தவணை ஜூன் மாதத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்த முறை 20வது தவணை வெளிவர தாமதமாகி வருகிறது. தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா

இந்த முறை பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் தவணையில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை. இருப்பினும், அறிக்கைகளின்படி, ஜூலை மாதத்தில் கலந்துகொள்ள இருக்கும் ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 20வது தவணையை வெளியிடுவார் என கூறப்படுகின்றது. 

PM-Kisan தவணை நிலையை எவ்வாறு செக் செய்வது?

- முதலில் https://pmkisan.gov.in என்ற பிஎம் கிசான் வலைதளத்திற்குச் செல்லவும்.

- இதற்குப் பிறகு ‘Know Your Status’ என்பதைக் கிளிக் செய்யவும்.

- உங்கள் பதிவு எண் அல்லது ஆதார் எண்ணை உள்ளிடவும்.

- உங்கள் பெயர் பயனாளிகள் பட்டியலில் உள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும்.

- தவணையை வெளியிடுவதற்கு கட்டாயமாக இருப்பதால், உங்கள் e-KYC பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பயனாளிகள் பட்டியலில் பெயர் உள்ளதா இல்லையா என்பதை எவ்வாறு செக் செய்வது?

- PM Kisan போர்ட்டலின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in -க்குச் செல்லவும்

- முகப்புப் பக்கத்தில் சிறிது ஸ்க்ரோல் செய்த பிறகு, கிசான் கார்னரின் கீழ் ‘Beneficiary List’ என்பதைக் கிளிக் செய்யவும்.

- உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமப் பெயரை உள்ளிடவும்.

- உங்கள் கிராமத்தில் உள்ள பயனாளிகளின் பட்டியலைக் காண 'Get Report’ என்பதைக் கிளிக் செய்யவும்.

சுயமாகப் பதிவு செய்த விவசாயிகள் தங்கள் நிலையை இந்த வழியில் செக் செய்யலாம்

CSC மையத்திலோ அல்லது ஆன்லைனிலோ தங்களைப் பதிவு செய்த விவசாயிகள் சில எளிய வழிமுறைகள் மூலம் தங்கள் ஒப்புதல் நிலையைச் சரிபார்க்கலாம்.

- PM Kisan அதிகாரப்பூர்வ போர்ட்டலான pmkisan.gov.in -க்குச் செல்லவும்.

- முகப்புப் பக்கத்தில் உள்ள கிசான் கார்னர் பிரிவில் ‘Status of Self Registered Farmer/CSC Farmers’  என்பதைக் கிளிக் செய்யவும்.

- உங்கள் நிலையைச் சரிபார்க்க உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சாவை நிரப்பவும்.
 
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு லெவல் 1-6: இணையும் பே ஸ்கேல்கள், இனி ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் நிச்சயம்

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குட் நியூஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More