PM Kisan Samman Nidhi Yojana: பலதரப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகிறது. விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்களில் பிஎம் கிசான் திட்டம் முக முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் கீழ், கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என மூன்று தவணைகளாக விவசாயிகளின் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகின்றது.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
இதற்கு முந்தைய தவணையான 19வது தவணை பிப்ரவரி 24, 2025 அன்று அளிக்கப்பட்டது. அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அடுத்த அதாவது 20வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் போலவே, இந்த முறையும் தவணைகளுக்கு இடையில் சுமார் 4 மாத இடைவெளி உள்ளது. ஜூன் மாதம் கடந்துவிட்டது, ஜூலை தொடங்கிவிட்டது, ஆனால் இதுவரை பிஎம் கிசான் 20வது தவணையின் தொகை வசாயிகளின் கணக்கில் வரவில்லை. ஜூன் கடைசி வாரத்தில் பணம் விவசாயிகளின் கணக்கிற்கு அனுப்பப்படும் என நம்பப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.
பிஎம் கிசானின் 20வது தவணை ஜூலை 18 அன்று வருகிறதா?
அடுத்த தவணை ஜூலை 18, 2025 அன்று வர வாய்ப்புள்ளதாக சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 18 அன்று பீகார் மாநிலம் மோதிஹரியில் ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்வின் போது, பிஎம் கிசான் 20வது தவணைக்கான வெளியீட்டை பற்றி அவர் அறிவிப்பார் என்று அறிக்கைகளில் கூறப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் பிஎம் கிசான் தவணைக்கான அறிவிப்பை பிரதமரே வெளியிடுகிறார். பிரதமர் மோடி ஜூலை 2 முதல் ஜூலை 9 வரை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தார். ஆகையால் தவணையில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது அவர் திரும்பி வந்தபிறகு ஜூலை 18 அன்று ஒரு பெரிய பேரணி இருப்பதால், அதே நாளில் விவசாயிகளின் கணக்கில் ரூ.2000 வரவு வைக்கப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் 20வது தவணைக்கான அனைத்து நடைமுறைகளும் அரசாங்கத்தால் முடிக்கப்பட்டுள்ளன. தேதி மட்டுமே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடந்த முறை போலவே, இந்த முறையும் தவணை ஒரு மெகா நிகழ்வில் வெளியிடப்படலாம், இந்த திட்டத்தின் நேரடி பலன் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா
விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் அடுத்த தவணையை எந்த வித தடையுமின்றி பெற விரும்பினால், சில முக்கியமான விஷயங்களை உடனடியாக செய்து முடிக்க வேண்டும்.
1. eKYC: eKYC செய்து முடிக்கவும்
eKYC இல்லாமல் எந்த விவசாயியும் பிஎம் கிசான் தவணையின் பலனைப் பெற முடியாது என்பதை அரசாங்கம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. பல சந்தர்ப்பங்களில், விவசாயிகளின் பணம் அவர்களின் eKYC முழுமையடையாததால் சிக்கிக் கொள்கிறது. நீங்கள் இன்னும் eKYC செய்து முடிக்கவில்லை என்றால், pmkisan.gov.in -க்குச் சென்று அல்லது உங்கள் அருகிலுள்ள CSC மையத்திற்குச் சென்று விரைவில் அதை முடிக்கவும்.
2. Bank Records: வங்கி விவரங்களைப் புதுப்பிக்கவும்
பல நேரங்களில் வங்கிக் கணக்கு மூடப்பட்டதாலோ அல்லது IFSC குறியீடு தவறாக இருப்பதாலோ தவணைத் தொகை வருவதில்லை. எனவே, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், IFSC குறியீடு மற்றும் ஆதார் இணைப்பு போன்ற தகவல்களை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும்.
3. Benificiary List: பயனாளிகள் பட்டியலில் பெயரை செக் செய்யவும்
இந்தத் திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதையும் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு, pmkisan.gov.in என்ற வலைத்தளத்திற்குச் சென்று, 'பயனாளி நிலை' (Beneficiary Status) பிரிவில் உங்கள் பதிவு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கவும். பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டாலோ அல்லது முழுமையற்ற தகவல் இருந்தாலோ, பணம் வராது.
4. Farmer Registry: விவசாயி பதிவு அவசியம்
பிஎம் கிசான் போர்டலில் பதிவு செய்வது மட்டும் போதாது. இப்போது அரசாங்கம் விவசாயி பதிவை (PM Kisan Farmer Registry) கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு விவசாயிகள் தங்கள் மாநிலத்தின் போர்டல் அல்லது அருகிலுள்ள CSC மையத்திற்குச் சென்று இந்தப் பதிவைச் செய்யலாம்.
பிஎம் கிசான் சம்மான் யோஜனாவின் பலன் யாருக்கு கிடைக்கும்?
நீங்கள் இந்திய குடிமகனாக இருந்து, சாகுபடி செய்யக்கூடிய நிலம் வைத்திருந்தால், உங்களுக்கு பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் பலன் கிடைக்கும். ஆனால் வரி செலுத்துபவராக இருந்தால், நிறுவன நிலம் வைத்திருந்தால் அல்லது ரூ.10,000-க்கும் அதிகமான ஓய்வூதியம் பெற்றால், பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் தவணையை நீங்கள் பெற முடியாது.
மேலும் படிக்க | ITR Filing: ஏன் ITR-ஐ முன்கூட்டியே தாக்கல் செய்ய வேண்டும்.. அதனால் என்ன பயன்?
மேலும் படிக்க | ரூ.1 கோடிக்கும் குறைவாக முதலீடு செய்து இந்த நாடுகளில் இந்தியர்கள் குடியுரிமை பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ