Home> Business
Advertisement

PM Kisan 20வது தவணை அடுத்த வாரம் வருகிறதா? அதற்கு முன் வந்த முக்கிய அப்டேட்

PM Kisan Latest News: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவில் சேர்க்கப்பட்டுள்ள விவசாயிகள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்கள் e-KYC செய்யப்படவில்லை என்றால், பயனைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

PM Kisan 20வது தவணை அடுத்த வாரம் வருகிறதா? அதற்கு முன் வந்த முக்கிய அப்டேட்

PM Kisan Samman Nidhi Yojana: நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் தற்போது மோடி அரசின் ஒரு முக்கியமான அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். பிஎம் கிசான் 20வது தவணை பற்றிய அறிவிப்புதான் அது. அறிவிப்பு வந்தவுடன் ஒரே கிளிக்கில், பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் ரூ.2000 தவணை விவசாயிகளின் கணக்கில் வந்து சேரும். 

PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படவிருந்தது. ஆனால் சில காரணங்களால், தவணையின் பலனை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், இப்போது ஜூலை மாதத்தில், மோடி அரசு இந்த மூன்றாவது தவணையான ரூ.2000 ஐ வெளியிடக்கூடும் என கூறப்படுகிறது.

பிரதமர் கிசான் சம்மான் நிதியிலிருந்து ஆண்டுதோறும் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு அரசாங்கம் ரூ.6000 வழங்குகிறது. இந்த நேரத்தில், நாட்டின் பெரும்பாலான விவசாயிகள் நெல் நடவு செய்யும் வேலையைச் செய்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் 20வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பிஎம் கிசான் 20வது தவணையான 2000 ரூபாய் ஜூலை 18 ஆம் தேதிக்குள் வந்து சேரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா

பிரதமர் மோடி தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் திரும்பியதும் ஜூலை 18 ஆம் தேதி பீகாரில் உள்ள மோதிஹரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இந்த நேரத்தில், பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணைத் தொகையை அவர் வெளியிடக்கூடும் என கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

இதற்கு முன்னர், பிரதமர் கிசான் சம்மான் நிதியின் 19வது தவணை பிப்ரவரி 24, 2025 அன்று வெளியிடப்பட்டது. அப்போது, பிரதமர் மோடி இந்தத் தவணியத் தொகையை பீகாரில் உள்ள பாகல்பூரிலிருந்து 9.8 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றினார். இதன் காரணமாக இந்த முறையும் பீகாரிலிருந்து பிரதமர் இந்த தொகையை வெளியிடக்கூடும் என நம்பப்படுகின்றது.

e KYC: 2000 ரூபாய் பெற இதை செய்வது மிக அவசியம்

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவில் சேர்க்கப்பட்டுள்ள விவசாயிகள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்கள் e-KYC செய்யப்படவில்லை என்றால், பயனைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். ஆகையால், 20வது தவணை தொகையை தவறாமல் பெற e-KYC-ஐ சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டியது மிக அவசியமாகும்.

How To Complete e KYC: e-KYC செய்வது எப்படி

- விவசாயி e-KYC செயல்முறையை முடிக்கவில்லை என்றால், 20வது தவணை அவர்களுக்கு கிடைக்காமல் போகலாம்.

- விவசாயிகள் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று இதைச் செய்யலாம்.

மேலும் படிக்க | கடன் செயலிகளால் வரும் பேராபத்துகள், தப்பிக்க இருக்கும் ஒரே வழி இதுதான்..!!

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு 3 மடங்கு ஊதிய உயர்வு: வெவல் 1 - லெவல் 10.... யாருக்கு எவ்வளவு? கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More