Home> Business
Advertisement

பிஎம் கிசான் 20வது தவணைத் தொகை : அரசின் முக்கிய அறிவிப்பு, இவர்களுக்கு கிடைக்காது

PM Kisan, 20th installment : வேளாண் அடுக்க எண் இல்லாதவர்களுக்கு இம்முறை பிஎம் கிசான் 20வது தவணைத் தொகை கிடைக்காது. ஜூன் 30 ஆம் தேதிக்குள் இந்த எண் பெற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. 

பிஎம் கிசான் 20வது தவணைத் தொகை : அரசின் முக்கிய அறிவிப்பு, இவர்களுக்கு கிடைக்காது

PM Kisan, 20th installment Update : மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டப்பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிர்சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவும், அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் பயன்பெறும் வகையில் அனைத்து விவரங்களை மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் விவசாயிகளின் நில உடைமைகளை சரிபார்த்து அவர்களுக்கு ஆதார் எண் போன்ற தனித்துவ அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம் அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. 

மேலும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைதுறை, வேளாண் வணிகத்துறை, மகளிர் திட்ட சமுதாய வனப்பயிற்றுனர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் கிராமங்களுக்கு வருகை தந்து விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அருகிலுள்ள பொது இ-சேவை மையங்களிலும் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் தங்களின் பட்டா,ஆதார் அட்டை மற்றும் செல்போன் மூலம் அடையாள அட்டை எண் பெற பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் இனிவரும் காலங்களில் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களின் பயன்களை ஒற்றைசாளர முறையில் விவசாயிகள் பெற இயலும். பிரதம மந்திரியின் கவுரவ நிதியுதவி திட்டத்தின் (PM Kissan) மூலம் பயன்பெற்று வரும் விவசாயிகள் வரும் ஜுன் மாதம் 30ம் தேதிக்குள் கட்டாயமாக தங்களது நிலஉடைமை விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யாதவர்களும், வேளாண் அடுக்க எண் இல்லாதவர்களுக்கும் பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணைத் தொகை கிடைக்காது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தோட்டக்கலைத்துறை, வேளாண்மைதுறை, வேளாண் வணிகத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு சென்று கூடுதல் தகவல் பெற்று விவசாயிகள் வேளாண் அடுக்க எண்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும். இப்போது வரை காலக்கெடு நீட்டிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருவேளை காலக்கெடு நீட்டிக்கப்படாவிட்டால் வேளாண் அடுக்க எண் பெறாதவர்களுக்கு பிஎம் கிசான் தொகை இம்முறை கிடைக்காது. 

மேலும் படிக்க | Mutual Fund: கடந்த 5 வருடங்களில் 30% - 40% வரை வருமானம் தந்த டாப் 50 மியூச்சுவல் ஃபண்டுகள் இவை தான்

மேலும் படிக்க | தொழில் செய்ய ரூ.15 லட்சம் தனிநபர் கடன், தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More