Home> Business
Advertisement

SIP Mutual Fund: மாதம் ரூ.1000 முதலீடு போதும்... ரூ.1 கோடி கார்பஸை கொடுக்கும் பரஸ்பர நிதியம்

SIP Mutual Fund: மாதம் ரூ.1000 சேமிப்பதன் மூலம் கோடீஸ்வரராக முடியுமா என்று சந்தேகம் எழுகிறதா? சந்தேகமே வேண்டாம். நிச்சயமாக ஆகலாம்! இதற்கு பரஸ்பர நிதியம் கை கொடுக்கும்.

SIP Mutual Fund: மாதம் ரூ.1000 முதலீடு போதும்... ரூ.1 கோடி கார்பஸை கொடுக்கும் பரஸ்பர நிதியம்

SIP Mutual Fund: குறைந்த வருமானம் இருந்தாலும் கோடீஸ்வர் கனவை நிறைவேற்றலாம். மாதம் ரூ.1000 சேமிப்பதன் மூலம் கோடீஸ்வரராக முடியுமா என்று சந்தேகம் எழுகிறதா? சந்தேகமே வேண்டாம். நிச்சயமாக ஆகலாம்! இன்றைய காலகட்டத்தில், SIP அதாவது முறையான முதலீட்டுத் திட்டம் என்பது சாதாரண மக்களும் எளிதாகப் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாக மாறிவிட்டது.

இந்தக் கட்டுரையில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 SIP செய்தால், இந்த முதலீடு நீண்ட காலத்திற்கு ரூ.1 கோடிக்கு மேல் எவ்வாறு வளரும் என்பதை எளிய கணக்கீடு மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், நீண்ட கால முதலீடு மூலம் கூட்டு வட்டி வருமானத்தின் பலனை முழுமையாக பெறலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் சராசரியாக 12% முதல் 15% வருமான கிடைப்பதை தரவுகள் உறுதிபடுத்துகின்றன. சில சிறந்த நிதியங்கள் 30% வரை வருமானம் தருகின்றன.

SIP முதலீட்டை எவ்வாறு தொடங்குவது?

1. நல்ல மியூச்சுவல் ஃபண்ட் செயலி அல்லது வலைத்தளத்திற்குச் சென்று முதலீட்டைத் தொடங்கலாம். (Groww, Zerodha, Paytm Money, Kuvera போன்றவை)

2. உங்கள் KYC (ஆதார், PAN) செயல்முறையை முடிக்கவும்

3. நீண்ட காலத்திற்கு சிறப்பாகச் செயல்படும் ஒரு நல்ல ஈக்விட்டி ஃபண்டைத் தேர்வு செய்யவும்.

4. ரூ.1000 SIP முதலீட்டைடத் தொடங்கி, காலப்போக்கில் அதை அதிகரித்துக் கொண்டே செல்லவும்

5. SIP ஏன் சிறந்த முதலீடாக கருதப்படுகிறது?

6. நீங்கள் ரூ.500 அல்லது ரூ.1000 அளவில் முதலீட்டிய தொடங்கலாம்.

7. நீண்ட கால முதலீட்டில் சந்தை ஏற்ற இறக்கங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது. 

8. கூட்டு வட்டி வருமானம் காரணமாக வருமானம் பன்மடங்கு அதிகரிக்கிறது.

9. ELSS நிதிகளில் முதலீடு செய்வது வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி சேமிப்பையும் வழங்குகிறது.

10. ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்யும் வாய்ப்பு

ரூ.1000 SIP எப்படி ரூ.1 கோடியாக வளரும்?

நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 முதலீடு செய்து 36 ஆண்டுகள் தொடர்ந்தால், கீழ்கண்ட கணக்கீட்டின் படி ரூ.1 கோடி கார்பஸ் பெறலாம்:

மாதந்தோறும் முதலீடு - ரூ.1000
ஆண்டு முதலீடு - ரூ.12,000
36 ஆண்டுகளில் மொத்த முதலீடு - ரூ.4,32,000
மதிப்பிடப்பட்ட சராசரி வருமானத்தில் (14%) மொத்த மூலதன வருமானம் - ரூ.97,74,079
முதிர்ச்சியின் போது மொத்த தொகை - ரூ.1,02,06,079

அதாவது, நீங்கள் ரூ.4.32 லட்சத்தை மட்டுமே முதலீடு செய்துள்ள நிலையில், காலப்போக்கில் அது ரூ.1 கோடிக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது.

நீண்ட கால முதலீட்டின் நன்மை

SIP முதலீட்டுத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை கூட்டு வட்டி வருமானம். 36 ஆண்டுகளில் சராசரி வருமானம் 14% ஆக இருந்தால், மாதத்திற்கு ரூ.1000 முதலீடு கூட ஒரு கோடி ரூபாயாக பெருகும். மறுபுறம், நீங்கள் தொடர் முதலீட்டில் 16%, 18% அல்லது 22% வருமானத்தைப் பெற்றால் (சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் இது நீண்ட காலத்தில் சாத்தியமாகும்), இந்த தொகை ₹2 கோடி அல்லது அதற்கும் அதிகமாக கூட இருக்கலாம்.

நீங்கள் தினமும் ரூ.33, அதாவது மாதத்திற்குரூ.1000 சேமித்து, அதை SIP முறையில் முதலீடு செய்தால், நீண்ட காலத்திற்கு 1 கோடி ரூபாய் மட்டுமல்ல, அதை விட பெரிய நிதியையும் உருவாக்க முடியும். உங்களுக்குத் தேவையானது பொறுமை, வழக்கமான முதலீடு மற்றும் சரியான மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுப்பது மட்டுமே.

மேலும் படிக்க | Mutual Fund: கடந்த 5 ஆண்டுகளில் 38% வரை வருமானம் தந்த 5 ஸ்டார் மியூச்சுவல் ஃபண்டுகள் இவை தான்

மேலும் படிக்க | பணக்காரர் ஆவது எளிது... பங்குச் சந்தையின் தந்தை Warren Buffet அளிக்கும்... முதலீட்டு டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More