Home> Business
Advertisement

பேக்கரி வச்சிருக்கீங்களா? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ் உங்களுக்கு தான்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி கொடுக்க உள்ளது. பேக்கரி தொழில் குறித்து ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

பேக்கரி வச்சிருக்கீங்களா? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ் உங்களுக்கு தான்


Tamil Nadu Government New Announcement : தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 21.07.2025 முதல் 24.07.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 6.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் ராகி நெய் குக்கீகள். சத்துமாவு குக்கீகள், கோதுமை தேங்காய் குக்கீகள், முத்து சோக்கோ தினை குக்கீகள் (கம்பு), கோடோ முந்திரி தினை குக்கீகள் (வரகு), சிறிய முந்திரி தினை குக்கீகள் (சாமை), சோளம் பிஸ்தா குக்கீகள் (சோலம்) தயாரிப்பது எப்படி என முழு செயல்விளக்கம் கொடுப்பார்கள்.

இதேபோல், பர்னார்ட் ஜீரா குக்கீகள் (குதிரைவாளி), மசாலா குக்கீகள், முழு கோதுமை ரொட்டி, பழ ரொட்டி, ராகி தினை ரொட்டி, பல தானிய ரொட்டி, ராகி சாக்கோ ரொட்டி, ராகி பிரவுனி, குதிரைவாலி தினை பிரவுனி, கருப்புகோவ்னி தினை பிரவுனி, பல தினை வால்நட் பிரவுனி, டேட்ஸ் தினை பிரவுனி, கோதுமை பிளம் கேக், ராகி சாக்லேட் கேக், ஜோவர் கேரட் கேக் (Cholam cake), ஃபாக்ஸ்டெயில் மற்றும் டேட்ஸ் கேக் (தினை) தயாரிப்பது எப்படி என சொல்லிக் கொடுக்கப்படும். இதுதவிர,  

வாழைப்பழம் வால்நட் கேக், தினை வெல்லம் வெண்ணெய் கேக், முழு கோதுமை பீட்சா, முழு கோதுமை பூண்டு ரொட்டி, ராகி கருப்பு காடு கேக், பட்டர்கிரீம் ஃப்ரோஸ்டிங்குடன் தினை வெண்ணிலா கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு
விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சிட்கோ தொழிற்பேட்டை, சென்னை- 600 032. 8668102600/7010143022. முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும். 

மேலும் படிக்க | அரசு திட்ட பணிகளுக்கான டெண்டர்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசு கொடுக்கும் பயிற்சி

மேலும் படிக்க | ஜூலை 9 பாரத் பந்த்: பஸ், ரயில் ஓடுமா? எந்த நிறுவனங்கள் இயங்கும்? எவை இயங்காது? முழு லிஸ்ட் இதோ

மேலும் படிக்க | ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ள பெண்களுக்கு ரூ.5 லட்சம் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ரேஷன் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More