Home> Health
Advertisement

நிபா வைரஸ் அலர்ட்! கேரளாவில் எச்சரிக்கை நிலை... அறிகுறிகள் இவை தான்

Nipah Virus: கேரளாவில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் நிபா வைரஸ் தொற்று பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நிபா வைரஸ் அலர்ட்!   கேரளாவில் எச்சரிக்கை நிலை... அறிகுறிகள் இவை தான்

கேரளாவில் நிபா வைரஸ்: கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் பாதிப்புகள் பதிவான பிறகு, சுகாதாரத் துறை 425 பேரை கண்காணிப்பில் வைத்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 228 பேர், பாலக்காட்டில் 110 பேர் மற்றும் கோழிக்கோட்டில் 87 பேர் கண்காணிப்பில் உள்ளனர் என்று சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். சுகாதாரத் துறை நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வைரஸின் மூலத்தைக் கண்டறிந்து பரவுவதைத் தடுக்க மலப்புரத்தில் விரிவான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. மக்கரபரம்பா, குருவா, கூட்டிலங்கடி மற்றும் மங்கடா பஞ்சாயத்துகளின் 20 வார்டுகளில் உள்ள 1,655 வீடுகளுக்கு 65 குழுக்கள் சென்றன. டாக்டர் என்.என். பமீலா தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது, இதில் சி.கே. சுரேஷ் குமார், எம். ஷாகுல் ஹமீத் மற்றும் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் கிரண் ராஜ் ஆகியோரும் அடங்குவர். நிபா வைரஸ் பரவல் தொடர்பான அறிக்கை மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ரேணுகாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பாலக்காட்டில், ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் 61 பேர்களின் உடல்நிலை குறைத்து சுகாதார ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இங்கு நோயாளிகள் உள்ளூரில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்படுகின்றன. மலப்புரம் மற்றும் பாலக்காட்டில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் எங்கு எங்கெல்லாம் சென்றார்கள் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளன.  இதனால் மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். கோழிக்கோட்டில் உள்ள 87 பேரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது வைரஸுடன் தொடர்பு கொண்ட சுகாதார ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத் துறை ஆம்புலன்ஸ் சேவைகளை தயாராக வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. வௌவால்கள் தான் வைரஸின் மூலமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. சுகாதார அமைச்சர் தலைமையில் ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது, இதில் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் பிற துறைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நிபா வைரஸ் என்றால் என்ன?

நிபா என்பது வௌவால்கள் அல்லது பன்றிகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு ஆபத்தான வைரஸ். அதன் தொற்று ஏற்பட்ட நபருக்கு, மூளையில் வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. 2018 முதல் கேரளாவில் இந்த வைரஸ் ஆறு முறை பரவியுள்ளது. இதில் 2018ஆம் ஆண்டில் 17 பேர் இறந்துள்ளனர். நிபா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. 

நிபா வைரஸ் அறிகுறிகள்

நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, காய்ச்சல், தசைகளில் வலி, தலைவலி, வாந்தி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்படலாம். இந்த அறிகுறிகள் இருப்போர் 4 முதல் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக இதற்கான மருத்துவ பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் படிக்க | Brain Stroke: மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள் இவை தான்... நரம்பியல் நிபுணர் அளித்த முக்கிய தகவல்

மேலும் படிக்க | மூளை ஆற்றல் முதல் வலுவான எலும்புகள் வரை.... வாழைக்காயை குறைத்து மதிப்பிடாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Read More