Home> India
Advertisement

65 வயது சொந்த பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது பேரன்! என்ன நடந்தது?

65 Year Old Grandmother Abused Grandson : சொந்த பாட்டியை வன்கொடுமை செய்த பேரன்! 65 வயது மூதாட்டிக்கு 25 வயது வலிபரால் ஏற்பட்ட கொடூரம்..  

65 வயது சொந்த பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது பேரன்! என்ன நடந்தது?

65 Year Old Grandmother Abused Grandson : 25 வயது வாலிபர், தனது சொந்த பாட்டியையே வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

நாளுக்கு நாள் நாளிதழ்களை திறந்தாலே பாலியல் வன்கொடுமை செய்திகளும், ஒரு தவறும் செய்யாதவர்கள் கொல்லப்படும் செய்திகளும் அதிகரித்து வருகின்றன. சினிமா, ஊடகம், நீதித்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு கூட, பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், பாண்டியன் குறித்த அறிவு பெரும்பாலான மக்களுக்கு இல்லாததாலா அல்லது குற்றம் செய்தால் என்ன பெரிய தண்டனை கிடைத்து விடப்போகிறது என்கிற தைரியமா என்பது தெரியவில்லை. 

குடும்பத்தில் இருக்கும் ஆண்கள், தங்கள் வீட்டு பெண்களிடம் வெளியில் பழகுபவர்களிடம் பார்த்து பழக வேண்டும் என்று கூறி அனுப்பவர். அவர்களால் தங்கள் வீட்டு பெண்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்கிற பயத்தால் அவர்கள் இப்படி செய்வர். ஆனால், சொந்த வீட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சொந்த மகளே தந்தை பாலியல் வன்கொடுமை செய்வதில் தொடங்கி, இன்று தனது பாட்டியை அவரது பேரன் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நிலைக்கு வந்து விட்டோம். 

பாட்டியை வன்கொடுமை செய்த பேரன்!

இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் இருக்கும், rohru இன்னும் இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு வசிக்கும் 65 வயது மூதாட்டி, தனக்கு நேர்ந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். தனது கணவரின் மரணத்திற்கு பிறகு தனியாக வசித்து வருவதாக கூறியிருக்கும் அவர், தனது சொந்த பேரனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டதாக அதிர்ச்சியளிக்கும் விஷயத்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

இது குறித்து அவர் அளித்துள்ள புகாரில், ஜூலை 3ஆம் தேதி மதிய வேளையில் தனது பேரன் வீட்டிற்கு வந்ததாகவும், அதன்பிறகு தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆள் ஆக்கியதாகவும் தெரிவித்திருக்கிறார். இதை வெளியில் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று தன்னை அவர் விரட்டியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

குற்றவாளி கைது: 

மூதாட்டி அளித்த புகாரின் பேரில், அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறிய 25 வயது பேரனை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவர் மீது, வன்கொடுமை, அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை கடந்த செவ்வாய்க்கிழமையன்று போலீசார் கைது செய்திருக்கின்றனர். இது குறித்து தகவல் தெரிவித்து அம்மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரணவ் சவுகான், இந்த வழக்கு மிகவும் செஞ்சிட்டிவான வழக்கு என்றும், இதனை சரியாக கையாள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | ரிதன்யா வழக்கில் நடப்பது என்ன? மாமியாருக்கு ஆப்பு வைத்த நீதிபதி! முழு விவரம்!

மேலும் படிக்க | கேரள நர்சுக்கு வெளிநாட்டில் மரண தண்டனை! காப்பாற்ற ஒரே ஒரு வழிதான்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More