Ahmedabad Plane Crash Latest News Updates: அகமதாபாத் நகரில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா AI-171, Boeing Dreamliner 787-8 விமானம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே நேற்று முன்தினம் (ஜூன் 12) விபத்துக்குள்ளானது. அகமதாபாத் பிஜே மருத்துவ கல்லூரி மாணவர்களின் விடுதி கட்டடத்தில் மோதியதில் விமானம் மொத்தமாக வெடித்து சிதறியது.
Ahmedabad Plane Crash: 274 பேர் உயிரிழப்பு
இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். மற்ற பயணிகள், விமானிகள், பயணிகள் என விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தனர். மேலும், கல்லூரி வளாகத்தில் இருந்த 33 பேரும் என மொத்தம் 274 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்துக்கு பின்னர் ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு முதல்முறையாக இன்று (ஜூன் 14) செய்தியாளர்களை சந்தித்தார். அவருக்கு முன்னதாக பேசிய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் சமீர் குமார் சின்ஹா, "அகமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமானநிலையம் நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக ஜூன் 12ஆம் தேதி அன்று பிற்பகல் 2 மணியளவில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இது குறித்த விரிவான தகவல்களை அகமதாபாத் விமான போக்குவரத்து ஆணையம் மூலம் உடனடியாகப் பெற்றோம்.
Ahmedabad Plane Crash: ஜூன் 12இல் நடந்தது என்ன?
இது ஒரு AIC 171 விமானம், அதில் 230 பயணிகள், 2 விமானிகள், 10 பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த விமானம் மதியம் 1:39 மணிக்கு புறப்பட்டது. சில நொடிகளில், சுமார் 650 அடி உயரத்தை அடைந்ததும் அது கீழே விழத் தொடங்கியது, அதாவது, உயரத்தை இழக்கத் தொடங்கியது. மதியம் 1:39 மணிக்கு விமானி அகமதாபாத் விமான போக்குவரத்து ஆணையத்திடம் (ATC) Mayday, அதாவது முழு அவசரநிலை என்று தெரிவித்தார்.
ATC அளித்த தகவலின் படி, அவர்கள் விமானத்தைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, எந்த பதிலும் கிடைக்கவில்லை. சரியாக 1 நிமிடத்திற்குப் பிறகு, இந்த விமானம் விமான நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேதானிநகரில் விபத்துக்குள்ளானது. விமானத்தின் கேப்டன் சுமித் சபர்வால் மற்றும் முதல் அதிகாரி கிளைவ் சுந்தர். விபத்துக்குள்ளான விமானத்தின் முழு வரலாற்றையும் பொறுத்தவரை, இந்த விபத்துக்கு முன்பு பாரிஸ்-டெல்லி-அகமதாபாத் பகுதியை எந்த விபத்தும் இல்லாமல் அந்த விமானம் நிறைவு செய்திருந்தது. இந்த விபத்து காரணமாக, பிற்பகல் 2:30 மணிக்கு ஓடுபாதை மூடப்பட்டது. அனைத்து நெறிமுறைகளும் முடிந்த பிறகு, மாலை 5 மணி முதல் அகமதாபாத்தின் ஓடுபாதை சில குறிப்பிட்ட விமானங்களுக்கு மட்டும் திறக்கப்பட்டது" என்றார்.
Ahmedabad Plane Crash: நாட்டையே உலுக்கிய சம்பவம்
தொடர்ந்து பேசிய ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, "கடந்த இரண்டு நாட்கள் மிகவும் கடினமாக இருந்தன. அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் நடந்த விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இந்த சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
அவர்களுக்காக என்ன செய்ய வேண்டும், என்ன ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்பதை மேற்பார்வையிட நான் நேரில் சம்பவ இடத்திற்கு விரைந்தேன். குஜராத் அரசின் அணுகுமுறையும் அதுவாகவே இருந்தது. மத்திய அரசு மற்றும் அமைச்சகத்தில் உள்ள மற்றவர்களிடம் இருந்தும் இதே அணுகுமுறை இருந்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தவுடன், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளில் இருந்தும் மீட்புக் குழுக்கள் களத்தில் செயல்பட்டு, முடிந்தவரை மீட்பு பணியிலும், தீயை அணைக்கவும், இடிபாடுகளை அகற்றவும் முயற்சிப்பதைக் கண்டோம்.
Ahmedabad Plane Crash: பிளாக் பாக்ஸ் மூலம் உண்மையை கண்டறியலாம்
இதனால் உடல்களை விரைவில் மருத்துவமனைக்கு அனுப்ப முடிந்தது. சம்பவங்கள், விமானங்களைச் சுற்றி நடக்கும் விபத்துகள் குறித்து ஆராய குறிப்பாக உருவாக்கப்பட்ட விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) உடனடியாக செயல்பட்டது. AAIB மூலம் நடைபெற்று வரும் தொழில்நுட்ப விசாரணையில் இருந்து ஒரு முக்கியமான அப்பேட் கிடைத்திருக்கிறது. நேற்று மாலை 5 மணியளவில் விபத்து நடந்த இடத்தில் இருந்து பிளாக் பாக்ஸ் மீட்கப்பட்டது.
பிளாக் பாக்ஸை விரிவாக ஆய்வு செய்வதன் மூலம், விபத்தின் போது அல்லது விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு உண்மையில் என்ன நடந்திருக்கும் என்பது பற்றிய ஆழமான தகவல்களை அது அளிக்கும் என்று AAIB குழு நம்புகிறது. AAIB அதன் முழு விசாரணையை மேற்கொண்ட பிறகு முடிவுகள் அல்லது அறிக்கை என்னவாக இருக்கும் என்று நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்..." என்றார்.
Ahmedabad Plane Crash: ஆய்வுக்குள்ளாகும் 34 விமானங்கள்
மேலும், Boeing Dreamliner 787-8 விமானங்களை ஆய்வு செய்வது குறித்து பேசிய ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, "நம் நாட்டில் விமானங்களை பொறுத்தவரை மிகவும் கடுமையான பாதுகாப்பு தரநிலைகள் உள்ளன. விபத்துக்கு பின் Boeing 787 விமானங்களில், நீட்டிக்கப்பட்ட கண்காணிப்பைச் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதையும் நாங்கள் உணர்ந்தோம்.
787 விமானங்களுக்கும் நீட்டிக்கப்பட்ட கண்காணிப்பைச் செய்ய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது இந்தியாவில் மட்டும் 34 Boeing 787 Dreamliner விமானங்கள் உள்ளன. இவற்றில் 8 விமானங்கள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று நான் நம்புகிறேன். தொடர்ந்து அனைத்து விமானங்களும் ஆய்வு செய்யப்பட உள்ளன" என்றார்.
மேலும் படிக்க | கறுப்புப் பெட்டி மீட்பு: அகமதாபாத் விமான விபத்துக்குக் காரணம் என்ன?
மேலும் படிக்க | அகமதாபாத் விமான விபத்து... ரூ.1,000 கோடியை தாண்டும் விமான காப்பீட்டுத் தொகை
மேலும் படிக்க | இந்தியாவை உலுக்கிய 10 விமான விபத்துகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ