Home> India
Advertisement

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... மெயில் அனுப்பியவரை நெருங்கிய போலீஸ் - சீனுக்குள் வந்த ஆளுநர்!

Delhi Schools Bomb Threat: டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிள் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... மெயில் அனுப்பியவரை நெருங்கிய போலீஸ் - சீனுக்குள் வந்த ஆளுநர்!

Delhi Schools Bomb Threat Latest News Updates: டெல்லி மற்றும் நொய்டாவை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இன்று காலையில் இருந்தே பரபரப்பான சூழல் நிலவுகிறது. பள்ளி நிர்வாகங்கள் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகள் தங்களின் மாணவ, மாணவிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிற்கு திருப்பி அனுப்பி உள்ளனர். 

இதுகுறித்து போலீசார் விசாரணையில் வெளியாகியுள்ள முதல் கட்ட தகவல்களை பார்க்கும்போது, ஒரே மாதிரியான மின்னஞ்சல்கள் பல பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. "அந்த மின்னஞ்சலில் தேதி குறிப்பிடப்படவில்லை. bcc (blind carbon copy) அந்த மின்னஞ்சலில் உள்ளது. அதாவது, ஒரே மெயில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காலியாக்கப்பட்ட பள்ளிகள்

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் உள்ள பல பள்ளிகளுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் உள்பட பலரும் பள்ளிகளில் சோதனை செய்து வருகின்றனர். இதுவரை எவ்வித வெடிகுண்டுகளும் கண்டறியப்படவில்லை, இருப்பினும் முன்னெச்சரிக்கையாக மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் இருந்து அனைவரையும் வெளியேற்றி இருக்கின்றனர்.

மேலும் படிக்க | அமேதி, ரேபரேலி: ஆசைப்படும் காங்கிரஸ் தொண்டர்கள்... ஆர்வம் காட்டாத ராகுல், பிரியங்கா

நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா (Lieutenant Governor VK Saxena) பள்ளிக்கு வருகை தந்தார். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வடக்கு டெல்லி பகுதியில் உள்ள DAV பள்ளிக்கு வருகை தந்தபோது செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது அவர்,"டெல்லி போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மின்னஞ்சலின் மூலத்தை கண்டுபிடித்துள்ளனர். 

துணைநிலை ஆளுநர் வேண்டுகோள்

போலீசார் மிகுந்த சிரத்தையுடன் இந்த விஷயத்தில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். நிச்சயம் இதன் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டெல்லி குடிமக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்" என்றார். மேலும் டெல்லி போலீசாரிடம் இருந்து விரிவான விசாரணையை கோரியுள்ளதாகவும் சக்சேனா கூறினார். 

மேலும் அவர்"பெற்றோர் பதற்றம் அடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து பள்ளி மற்றுன் அதன் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். குற்றவாளிகளை தப்பிக்க விட மாட்டோம்" என்றார்.

அதிகாலையில் வந்த மின்னஞ்சல்

இன்று அதிகாலை 4.30 மணியில் இருந்து பல பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய மூத்த போலீஸ் அதிகாரி ரோஹித் மீனா,"ஒரு மின்னஞ்சல் பல பள்ளிகளுக்கு இன்று அதிகாலை 4.15 மணிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, பள்ளிகளை மூடியுள்ளோம். அனைத்து பள்ளிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. எங்களின் தொழில்நுட்ப்ப பிரிவினரும் மின்னஞ்சல் குறித்து விசாரித்து வரகிறது. முதற்கட்ட விசாரணையில், இந்த ஒரு மின்னஞ்சல் பல பேருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது" என்றார். 

மேலும் படிக்க | பிரஜ்வல் ரேவண்ணா பதவி விலகுவாரா? ஆபாச சர்ச்சையில் சிக்கிய கர்நாடக அமைச்சர்கள் யார்.. யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More