Gujarat Bridge Collapse: குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள கம்பீரா - முஜ்பூர் பாலத்தின் ஒரு பகுதி இன்று (ஜூலை 9) காலை இடிந்து விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது.
மத்திய குஜராத், தெற்கு குஜராத், சௌராஷ்டிரா ஆகிய பகுதிகளை இணைக்கும் பாலமாக இந்த கம்பீரா பாலம் உள்ளது. குறிப்பாக, இந்த பாலத்தில் அதிகமாக தற்கொலை சம்பவங்கள் நடக்கும் இடமாக உள்ளது. லக்னோவை தளமாகக் கொண்ட பால கட்டுமான நிறுவனம் பாலத்தை கட்டியது.
Gujarat Bridge Collapse: 11 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். பாலத்தில் சென்றுகொண்டிருந்த இரண்டு டிரக்குகள், Bolero கார், வேன் என நான்கு வேன்களும் மஹிசாஹர் ஆற்றில் கவிழ்ந்தன. இன்று காலை போக்குவரத்து அதிகம் இருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
குஜராத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டத்தை இணைக்கும் முக்கிய பாலமாக இந்த கம்பீரா பாலம் இருந்து வந்தது. குறிப்பாக, வதோதரா மாவட்டத்தின் பத்ரா நகருக்கு அருகில் அமைந்துள்ள காம்பீரா பாலம், தெற்கு குஜராத்தில் இருந்து சௌராஷ்டிரா பகுதிக்கு போக இதுதான் குறுக்கு வழி எனலாம். அந்தளவிற்கு இந்த பாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
Gujarat Bridge Collapse: 50 கி.மீ., கூடுதலாக போகணும்...
தற்போது இந்த பாலம் இடிந்ததன் காரணமாக, தெற்கு குஜராத்தில் இருந்து சௌராஷ்டிராவுக்கு வாசத் நகரம் வழியாகவே செல்ல வேண்டும். இதனால், வாகன ஓட்டிகள் 50 கிலோமீட்டர் கூடுதலாக செல்ல வேண்டியிருக்கிறது. இதனுடன், தெற்கு குஜராத்தில் இருந்து வரும் மற்றும் தெற்கு குஜராத்திற்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் வாசத் நகரை நோக்கி திருப்பி விடப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
பாலத்தின் இடிபாடு தெற்கு குஜராத்தில் இருந்து சவுராஷ்டிராவுக்குச் செல்பவர்களுக்கு மட்டுமின்றி ஆனந்த் மற்றும் வதோதராவின் கிராமப்புற இணைப்புச் சாலைகளிலும் போக்குவரத்து அதிகமாக வாய்ப்புள்ளது.
ஆனந்த் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து அன்றாட வேலைக்காக பத்ரா நகருக்குச் செல்லும் மக்களும் இப்போது கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும் மாற்று ஏற்பாடாக, போக்குவரத்து தற்போது சிந்த்ரோட்டை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. இதற்காக, வாகனங்கள் 16 கி.மீ. மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.82000 உதவித்தொகை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ