Home> India
Advertisement

கேரள நர்சுக்கு வெளிநாட்டில் மரண தண்டனை! காப்பாற்ற ஒரே ஒரு வழிதான்..

Nimisha Priya Case : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஆன நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்திதான் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

கேரள நர்சுக்கு வெளிநாட்டில் மரண தண்டனை! காப்பாற்ற ஒரே ஒரு வழிதான்..

Nimisha Priya Case : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஆன நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்திதான் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட என்ன காரணம் ? ஏமன் நாட்டில் உள்ள இவருக்கு நடந்தது என்ன என்பதை பார்க்கலாம் .

ஏமன் நாட்டுக்கு சென்ற கேரள செவிலியர்:

ஏமன் நாட்டில் உள்ள சனா நகரில் இருக்கும் சிறையில்தான் நிமிஷா உள்ளார் . கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் தான் 35 வயதாகும் நிமிஷா பிரியா. கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியராக வேலைக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் வேலை செய்து வந்த அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து  தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். தாமஸும் நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில்தான் உள்ளனர் . 

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஏமன் நாட்டை சேர்ந்த தளால் அப்துல் மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையை தொடங்கினார் நிமிஷா. 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது . மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து சவுதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.  அதிகப்படியான மயக்க மருந்து கொடுத்து மஹ்தி-யை அவர் கொலை செய்ததாக நிமிஷம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நிமிஷாவுக்கு நடந்தது என்ன?

நிமிஷாவை உடல் ரீதியாக மஹ்தி துன்புறுத்தியதாகவும் அவரது பணம் , பாஸ்போர்ட்டை பறித்து கொண்டு மிகவும் மோசமாக நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது நிமிஷா மயக்க மருந்து கொடுத்து பாஸ்போர்ட்டை மட்டுமே மஹதீயிடமிருந்து பெற்றுக் கொண்டு தப்பிக்க நினைத்ததாகவும் திடீரென மருந்தின் அளவு அதிகரித்ததால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் ஏமன் நீதிமன்றம் இதனை ஏற்றுக் கொள்ளாமல் கடந்த 2020 ஆம் ஆண்டு நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது . அதன்பிறகு பல்வேறு சட்டப் போராட்டங்களை நிமிஷா மேற்கொண்டார். 

இந்த நிலையில் தற்போது நிமிஷாவுக்கு ஜூலை 16-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற ஆணை வெளியாகி உள்ளது . இதனை அடுத்து இந்தியர்கள் பலரும் நிமிஷாவுக்காக தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காப்பாற்ற ஒரே ஒரு வாய்ப்பு..

இப்போது நிமிஷாவை காப்பாற்றும் நடவடிக்கையில் பல்வேறு நடவடிக்கைகளை நிமிஷாவின் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மஹ்தி குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது . ஏமன் சட்டப்படி மஹ்தியின் குடும்பத்தினர் மன்னிப்பு அளித்தால் நிமிஷாவின் மரண தண்டனை நீக்கப்படுமாம். ஆனால் அவர்கள் இறுதிவரை இறங்கி வரவில்லை . இன்னும் தண்டனை வழங்கப்பட சில நாட்களே இருக்கும் நிலையில், நிமிஷாவின் குடும்பத்தினர் கொடுக்கும் சன்மானத்தை ஏற்றுக்கொண்டு மஹ்தியின் குடும்பத்தினர் இறங்கி வந்தால் மட்டுமே நிமிஷாவை காப்பாற்ற இயலும்.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை:

நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இது, விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அவசர விசாரணைக்கு உட்படுத்துமாறு மூத்த வழக்கறிஞர் ஆர். பசந்த் கேட்டுக் கொண்டார்.

ஷரியத் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் "Blood Money" (பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியவரின் குடும்பத்தின் சார்பில் கொடுக்கும் பணம்) ஏற்க ஒப்புக்கொண்டால், ஒருவரை விடுவிக்க முடியும் என்றும், அந்த விருப்பத்தை ஆராய பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார். இது குறித்த முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | மரண தண்டனை கைதியான தனது மகளை 11 ஆண்டுக்கு பின் சந்தித்த தாய்!

மேலும் படிக்க | டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... நீண்ட நேரம் நீடித்த அதிர்வு - அதிர்ச்சியில் மக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More