Operation Sindoor Latest News Updates: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கடந்த மே 7ஆம் தேதி நள்ளிரவு 1.05 மணிமுதல் 1.30 மணிவரை இந்திய ஆயுதப்படைகள் தொடுத்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் தரைமட்டமாகின. இதில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Operation Sindoor: திடீரென கிளம்பிய சர்ச்சை
காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என இந்திய அரசு அழுத்தம் திருத்தமாக தெரிவித்தது. மேலும், இந்த நடவடிக்கையில் பயங்கரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டன என்றும் இதில் பொதுமக்களோ, ராணுவ தளங்களோ தாக்கப்படவில்லை எனவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்த சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்கிறது. புதுடெல்லியில் உள்ள ஹோண்டுராஸ் தூதரகத்தில் நடந்த ஒரு உரையாடலின் போது வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்தே சர்ச்சை எழுந்தது எனலாம். ஜெய்சங்கர் பேசும் அந்த வீடியோவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று அவரது X பக்கத்தில் பகிர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
Operation Sindoor: ராகுல் காந்தி எழுப்பிய 2 கேள்விகள்
ராகுல் காந்தி அவரது X பதிவில், "இந்தியாவின் தாக்குதலுக்கு முன்னர், பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவித்தது ஒரு குற்றம். இந்திய அரசு இதைச் செய்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. முதல் கேள்வி, யார் அதை அங்கீகரித்தது?, இரண்டாவது கேள்வி, இதன் விளைவாக நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது?" என இரண்டு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஏன் இந்திய அரசு முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தகவல்களை தெரிவித்தது என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகம் ராகுல் காந்தியின் கூற்றை முற்றிலும் மறுப்பு தெரிவித்து இதுகுறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.
Operation Sindoor: வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் விளக்கம்
இதுகுறித்து வெளியுறவத்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில், "நாங்கள் ஆரம்பத்தில் பாகிஸ்தானை எச்சரித்திருந்தோம். அதாவது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன் அல்ல, தாக்குதல் தொடங்கிய உடன்... ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முன்பே தகவல் சொல்லிவிட்டதாக தவறாக சித்தரிக்கப்படுகிறது. உண்மைகள் முற்றிலும் தவறாக திரிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
External Affairs Minister S Jaishankar had stated that we had warned Pakistan at the start, which is clearly the early phase after Op Sindoor’s commencement. This is being falsely represented as being before the commencement. This utter misrepresentation of facts is being called… pic.twitter.com/tAsvSBYLSK
— Press Trust of India (@PTI_News) May 17, 2025
India Pakistan Ceasefire: இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்
கடந்த ஏப். 22ஆம் தேதி நடந்த பகல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியது. இதையடுத்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க மே 7ஆம் தேதி இந்திய அரசு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பதற்றம் அதிகரித்தது. பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் பல நகரங்களை குறிவைத்து டிரோன்கள், ஏவுகணைகளால் தாக்குதல் தொடுக்க முயற்சித்தது. அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலும் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது, அதற்கும் பதிலடி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மே 10ஆம் தேதி போர் நிறுத்தம் உடன்பாடு எட்டப்பட்டது.
மேலும் படிக்க | இந்திய ராணுவ ரகசியம்... பாகிஸ்தானுக்கு கசியவிட்ட பெண் யூ-ட்யூபர் அதிரடி கைது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ