Cyber Attack on Zee News: இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், பாகிஸ்தானின் செயல்பாடுகள் அணுதினமும் மிக மோசமாகி வருகிறது எனலாம். பாகிஸ்தானின் போலி செய்திகள் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளை உலகம் முழுவதும் நமது ZEE NEWS ஊடகம் உண்மைச் சரிபார்ப்பு மூலம் அம்பலப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் இந்திய ஆயுத படைகளின் பதிலடியை பொறுத்துக்கொள்ள முடியாமல், கோழைத்தனமாக நமது Zee News மீது நேரடி சைபர் தாக்குதலை தொடுத்திருக்கிறது. இருப்பினும், அது முற்றிலும் முறியடிக்கப்பட்டுள்ளது. ZEE News ஊடக்கத்தின் மும்பை, போபால், பாட்னா உள்ளிட்ட மூன்று மையங்களில் பாகிஸ்தான் மேற்கொண்ட சைபர் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ஹேக்கர்கள் ஜீ நியூஸின் பீகார் மற்றும் ஜார்கண்ட் பிராந்திய சேனல்களை ஹேக் செய்துள்ளனர். நேரடி ஒளிப்பரப்பான Live Feed ஹேக் செய்யப்பட்டாலும், சேனல் அதன் யூடியூப் தளத்தில் இருந்து அதன் செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.
ZEE NEWS எப்போதும் பாகிஸ்தான் அரசு மற்றும் அந்நாட்டின் ராணுவத்தின் தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாகவே இருந்து வருகிறது. ஏனெனில் ZEE News எப்போதும் பாகிஸ்தானின் உண்மை முகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, Zee News பாகிஸ்தானின் பொய்களை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி உலகிற்கு உண்மையை உரக்கச் சொல்லிவந்தது. அப்போது பாகிஸ்தான் அரசு அந்நாட்டில் நமது Zee News ஊடகத்தை தடை செய்திருந்தது கவனிக்கத்தக்கது. இருப்பினும், பாகிஸ்தான் மக்கள் இன்னும் Zee News ஊடகத்தை VPN பயன்படுத்தி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யூ-ட்யூபிலும் அங்கு மக்கள் நமது Zee News ஊடகத்தின் செய்திகளை பார்த்து வருகின்றனர். நமது பல வீடியோக்கள் அங்கும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
பாகிஸ்தான் அரசு செய்யும் தவறுகளைப் பற்றி Zee News பலமுறை வெளிப்படையாக மக்கள் முன் விவாதித்திருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் மக்கள் தங்கள் அரசின் செயல்களைப் பற்றிய உண்மை நிலையை அறிந்து கொள்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், பாகிஸ்தான் அரசு ஏற்கனவே Zee News தளத்தை குறிவைத்திருந்தது. இதுமட்டுமின்றி, பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் வளர்ந்து வரும் பயங்கரவாதிகளுக்கு எதிராக Zee News குரல் எழுப்பியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பாகிஸ்தான் அரசும், ராணுவமும் நமது Zee News ஊடகத்தின் செய்திகளால் கலக்கமடைந்துள்ளது மட்டுமல்லாமல், பயங்கரவாதிகள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க | இந்தியாவை உளவு பார்த்த பாகிஸ்தானிய 'உளவாளிகள்'
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ