Home> India
Advertisement

'பயணிகள் விமானத்தை வைத்து சதி...' பாகிஸ்தானை போட்டுத்தாக்கிய பிரதமர் மோடி

PM Modi In Adampur: பாகிஸ்தான் அவர்களது பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி சதி திட்டத்தை தீட்டியது என பிரதமர் மோடி, விமானப்படை வீரர்கள் முன்னிலையில் பேசி உள்ளார்.

'பயணிகள் விமானத்தை வைத்து சதி...' பாகிஸ்தானை போட்டுத்தாக்கிய பிரதமர் மோடி

PM Modi In Adampur: பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 13) நாட்டின் இரண்டாவது பெரிய ராணுவ தளமான, பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு வருகை தந்தார். அப்போது, விமானப்படை வீரர்களின் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் அவர் விரிவாக பேசியிருந்தார்.

பிரதமர் மோடி, ஆதம்பூர் விமானப்படை வீரர்கள் மத்தியில், இந்தி மொழியில் ஒரு நீண்ட உரையை ஆற்றினார். இந்த உரையில், பாகிஸ்தான் எப்படி பயணிகள் விமானங்களை கேடயமாக வைத்து, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தியது என்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக கூறினார்.

மேலும் வீரர்களின் முன்னிலையில் பேசிய பிரதமர் மோடி, "உங்களது துல்லியமான தாக்குதல் எதிரியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்போது தாக்கப்பட்டோம் என்று கூட அவர்கள் உணரவில்லை. பயங்கரவாத தலைமையகத்தையும், பயங்கரவாதிகளையும் தாக்குவதே நமது நோக்கமாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் தனது பயணிகள் விமானங்களை முன்னால் நிறுத்தி ஒரு சதித்திட்டத்தை தீட்டியது... 

அது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஆனால் நீங்கள் ஒரு அற்புதமான பணியை செய்திருக்கிறீர்கள். எந்த பயணிகள் விமானத்திற்கும் தீங்கு ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொண்டீர்கள் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நீங்கள் தக்க பதிலடியை கொடுத்தீர்கள்..." என்றார்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை (மே 9) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ​​பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடவே இல்லை என்பதை இந்தியா ஆதரங்களுடன் சுட்டிக்காட்டியது. அதாவது, மே 8ஆம் தேதி பாகிஸ்தான் இந்தியா மீது 300-400 ஏவுகணைகளை ஏவியபோதும், சர்வதேச விமானங்கள் உட்பட சந்தேகத்திற்கு இடமில்லாத பயணிகள் விமானங்களை பாகிஸ்தான் கேடயங்களாகப் பயன்படுத்தியது என்றும் அம்பலப்படுத்தியது.

இதுகுறித்து அப்போது ராணுவ கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், "இந்தியா மீதான தாக்குதல் விரைவான வான் தடுப்பு பாதுகாப்பால் பதிலடியை பெறும் என்பதை நன்கு அறிந்த பாகிஸ்தான், பொதுமக்கள் விமானங்களை கேடயமாகப் பயன்படுத்தியது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சர்வதேச எல்லைக்கு அருகில் பறந்து கொண்டிருந்த சர்வதேச விமானங்கள் உட்பட சந்தேகத்திற்கு இடமில்லாத பயணிகள் விமானங்களுக்கு அது பாதுகாப்பானது அல்ல" என பேசியிருந்தார். 

அதாவது, பாகிஸ்தான் இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்த மே 8ஆம் தேதி அன்று மாலையில், பாகிஸ்தானின் லாகூர் அருகே குறைந்தபட்சம் இரண்டு பயணிகள் விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. அதே நேரத்தில் இந்தியப் பக்கத்தில் பாகிஸ்தானின் பல்வேறு டிரோன்கள், ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டன. இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கும்போது, ​​இந்தியா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள தனது வான்வெளியை பயணிகள் விமானங்களுக்கு மூடியிருந்ததாக இந்திய அரசு தெரிவித்திருந்தது.  

மேலும் படிக்க | போர் நிறுத்தம் தற்காலிகமானதுதான்.. பிரதமர் மோடி ட்விஸ்ட்!

மேலும் படிக்க | 'PoK, பயங்கரவாதம்...' உலக நாடுகளிடம் கட் அண்ட் ரைட்டாக சொன்ன பிரதமர் மோடி

மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுத போரை நிறுத்திவிட்டேன் - டிரம்ப் போட்ட குண்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More