Home> India
Advertisement

பிரதமர் மோடியின் ஒரே ஒரு புகைப்படம்... பாகிஸ்தானின் மொத்த வதந்தியும் கிளோஸ்!

PM Modi Adampur Airbase Visit: ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்ததன் மூலம் பாகிஸ்தானின் வதந்திகளை மற்றொரு முறை அம்பலமாகி உள்ளது.

பிரதமர் மோடியின் ஒரே ஒரு புகைப்படம்... பாகிஸ்தானின் மொத்த வதந்தியும் கிளோஸ்!

PM Modi Adampur Airbase Visit: பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அடுத்து கடந்த ஏப். 22ஆம் தேதி முதல் போர் நிறுத்தம் உடன்பாடு எட்டப்பட்ட மே 10ஆம் தேதிவரை இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான பதற்றம் நிலவி வந்தது.

இதற்கிடையில், இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து 9 பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி, அதில் 100 பயங்கரவாதிகளை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

PM Modi Adampur: பிரதமர் மோடி ஆதம்பூர் வருகை

தற்போது பதற்றம் குறைந்திருக்கும் வேளையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆச்சர்யமளிக்கும் விதமாக பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு இன்று (மே 13) வருகை தந்தார். அங்கு விமானப்படை வீரர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர், வீரர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்தோடு அவர் அந்த பதிவில், "இன்று காலை, நான் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான விமானப்படை வீரர்கள், ராணுவ வீரர்களைச் சந்தித்தேன். துணிச்சல், உறுதிப்பாடு, அச்சமின்மை ஆகியவற்றின் உருவமாக இருப்பவர்களுடன் நேரம் செலவிடுவது என்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நாட்டிற்காக நமது ஆயுதப் படைகள் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கும்"  என பதிவிட்டுள்ளார்.

PM Modi Adampur: ஒரே ஒரு புகைப்படம்

மேலும் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடியின் பல்வேறு புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. ஆனால், அதில் குறிப்பிடத்தக்க புகைப்படம் ஒன்றுள்ளது. பிரதமர் மோடி வீரர்களை நோக்கி கையசைக்கும் அந்த புகைப்படத்தின் பின்னணியில் MIG-29 போர் விமானமும், அசாரத S-400 வான் தடுப்பு பாதுகாப்பு அமைப்பும் தெளிவாக தெரிகிறது. 

இந்த புகைப்படம் முதல் பாகிஸ்தானுக்கு இரண்டு செய்திகளை சொல்லலாம். பாகிஸ்தானின் JF-17 போர் விமானத்தில் இருந்து வந்த ஏவுகணைகள் ஆதம்பூரில் உள்ள S-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக பாகிஸ்தான் கூறியதை நிராகரித்து, அது பொய் தகவல் என்பது உறுதிப்படுத்தியிருக்கிறது. அது மட்டுமின்றி, இந்திய அரசு அதன் ஆயுதப் படைகளுக்கு ஆதராவக உள்ளது என்பதற்கான உறுதியான சமிக்ஞையாகவும் இது அமைந்துள்ளது.

ஆதம்பூர் விமானப்படை தளம்தான், நாட்டின் இரண்டாவது பெரிய ராணுவ தளமாகும். பாகிஸ்தானின் தொடர் பொய் செய்திகளை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டும் வகையில் பிரதமரின் இந்த வருகை அமைந்துள்ளது. நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, போர் நிறுத்தம் தற்காலிகமானது என்று கூறியிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

PM Modi Adampur: பாகிஸ்தான் சொல்லிய பொய்

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து, நமது விமானப்படை தளத்தை பாகிஸ்தான் டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் குறிவைத்ததால் ஆதம்பூர் பல நாட்கள் பதற்றத்தில் இருந்தது. இருப்பினும், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட நமது S-400 வான் பாதுகாப்பு அமைப்பான இந்தியாவின் 'சுதர்சன் சக்ரா', பாகிஸ்தான் ஏவுகணைகளை முற்றிலும் முறியடித்தது. 

பாகிஸ்தான் ஆதம்பூர் ராணுவ தளத்தை நோக்கி ஏவிய டிரோன்கள், ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டு சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், பாகிஸ்தான் போலி வீடியோக்களை வெளியிட்டு, தவறான தகவல்களை பரப்பும் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

பாகிஸ்தான் ராணுவம், ஆதம்பூர் விமானப்படை தளத்தில் சேதமடைந்த S-400 ஏவுகணையின் செயற்கைக்கோள் படம் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. இருப்பினும், இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானின் பொய் தகவல்களை மறுத்துவரும் நிலையில், சமூக ஊடகங்கள் பாகிஸ்தானின் போலித்தனத்தை விரைவாகவே அம்பலப்படுத்தின.

மேலும் படிக்க | 'PoK, பயங்கரவாதம்...' உலக நாடுகளிடம் கட் அண்ட் ரைட்டாக சொன்ன பிரதமர் மோடி

மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுத போரை நிறுத்திவிட்டேன் - டிரம்ப் போட்ட குண்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More