PM Narendra Modi On India Pakistan Ceasefire: பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியை கொடுத்து 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. அந்த வகையில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பின்னர் நாட்டு மக்களுக்கு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 12) உரையாற்றினார்.
PM Modi: பிரதமர் மோடி பேச்சின் ஹைலைட்ஸ்
அப்போது பாகிஸ்தான் குறித்தும் பயங்கரவாதம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்த அவர் பகல்காம் தாக்குதல் மிகுந்த மனவலியை கொடுத்ததாகவும், இந்தியாவின் பதிலடி முற்றிலும் நியாயமானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒவ்வொரு பெண்களுக்கும் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை நான் சமர்ப்பிக்கிறேன் என பிரதமர் மோடி பேசியிருந்தார்.
PM Modi: போர் நிறுத்தம் தற்காலிகமே...!
பாகிஸ்தான் நமது எல்லையை தாக்கியது, நாம் அவர்களின் இதயத்தை தாக்கினோம் என்றும் அணு ஆயுதத்தை வைத்துக் கொண்டு இந்தியாவை மிரட்டும் வேலைகளில் இனி ஈடுபட முடியாது என்றும் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். தீவிரவாதிகளின் பல்கலைக்கழகமாக உள்ள பகவல்பூர், முர்திகி உள்ளிட்டவை கடுமையாக தாக்கப்பட்டுள்ளது என்றும் இந்த இடங்கள் உலக அளவிலான தீவிரவாதிகளுக்கு முக்கிய மையமாகத் திகழ்ந்தது என்றும் அவர் பேசியிருந்தார். போரை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது என்றும் போர் தற்காலிக நிறுத்தம் தான், நாம் அவர்களை தொடர்ந்து கண்காணிப்போம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
PM Modi: உலக நாடுகளுக்கு...
பிரதமர் மோடி தனது பேச்சில், "பயங்கரவாதமும், அமைதி பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது. பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது. ரத்தமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய முடியாது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தால், அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) குறித்து மட்டுமே இருக்கும் என்று சர்வதேச சமூகத்திற்கு நான் சொல்ல விரும்புகிறேன்" என்றார்.
பாகிஸ்தான் தனது பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்ற வேண்டும் என்றும் அமைதிக்கு வேறு வழியே இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கையாக 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளது என்றும் இது ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளது என்றும் அவர் பேசியிருந்தார். பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகள் ஒரு நாள் பாகிஸ்தானையே அழித்துவிடுவார்கள் என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுத போரை நிறுத்திவிட்டேன் - டிரம்ப் போட்ட குண்டு!
மேலும் படிக்க | விராட் கோலி என்னுடைய ஃபேவரைட்.. ராணுவத்துடன் கிரிக்கெட்டை ஒப்பிட்ட ஜெனரல் (DGMO)
மேலும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர்: முழு விவரங்களை பகிர்ந்துகொள்ள முடியாது - முப்படைகள் விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ