Sharmishta Panoli Arrest: ஆபரேஷன் சிந்தூர் குறித்த பதிவில் சர்ச்சையாக பேசியதாக இன்ஸ்டாகிராம் பிரபலமான ஷர்மிஷ்டா பனோலி என்பவர் கைது செய்யப்பட்டது தற்போது நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
ஹரியானாவின் குருகிராம் நகரில் ஷர்மிஷ்டா பனோலியை கொல்கத்தா போலீசார் நேற்று (மே 31) கைது செய்தனர். இணையத்தில் சமூக நல்லிணகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் பதிவுகளை போட்டதாக குற்றஞ்சாட்டி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், பாலிவுட் நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். ஏன் கங்கனா இவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Sharmishta Panoli: யார் இந்த ஷர்மிஷ்டா பனோலி?
முதலில், ஷர்மிஷ்டா பனோலி யார் என்பதை பார்க்கலாம். 22 வயது சட்டக் கல்லூரி மாணவியான ஷர்மிஷ்டா பனோலி, புனே சட்டப் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமிலும் பிரபலமாக அறியப்படுகிறார். இவரது இன்ஸ்டாகிராம் கணக்கை சுமார் 93.1 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். ஆனால், தற்போது அவரது பக்கத்தில் ஒரு பதிவை கூட பார்க்க முடியவில்லை. சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்து அவர் வெளியிடும் பதிவுகள் அவரை பிரபலமாக்கி இருக்கிறது.
Sharmishta Panoli: வீடியோவில் எப்படி என்ன பேசினார்?
இந்நிலையில் கடந்த மே 14ஆம் தேதி அவர் போட்ட வீடியோதான் அவரது கைதுக்கு முதன்மையான காரணமாக அமைந்திருக்கிறது. அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட அந்த வீடியோவில் ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமைதியாக இருக்கும் பாலிவுட் பட நடிகர்களை குற்றஞ்சாட்டும் வகையில் அவர் பேசியிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவரின் பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. அவரை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிய நிலையில், ஒரு சில கொலை மிரட்டல் மெசேஜ்களும் வந்துள்ளனர்.
Sharmishta Panoli: மன்னிப்பு கேட்டும்...
கடும் எதிர்ப்புகள் கிளம்பவே சுதாரித்துக்கொண்ட ஷர்மிஷ்டா பனோலி, அந்த வீடியோவை உடனடியாக நீக்கி உள்ளார். மேலும், அந்த வீடியோவுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். இருப்பினும் கொல்கத்தாவில் அவர் மீது ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மே 14ஆம் தேதி வீடியோ பதிவிட்டு, மே 15ஆம் தேதி இன்ஸ்டாகிராம் மற்றும் X பக்கங்கள் மூலம் தனது மன்னிப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த மன்னிப்பு கேட்ட பதிவில், "இதன் மூலம் நான் எனது நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன். என்ன கூறினாலும், இது எனது தனிப்பட்ட உணர்வாகும், நான் யாரையும் வேண்டுமென்றே காயப்படுத்த விரும்பவில்லை. எனவே யாராவது காயமடைந்திருந்தால், மன்னிக்கவும்... இனிமேல், எனது பொதுப் பதிவுகளில் நான் கூடுதல் எச்சரிக்கையாக இருப்பேன்" என பதிவிட்டிருந்தார்.
Sharmishta Panoli: 14 நாள்கள் நீதிமன்ற காவல்
மன்னிப்பு கேட்டிருந்தாலும் அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடங்கி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்த நோட்டீஸிற்கு பதிலளிக்காத காரணத்திற்காக கொல்கத்தா போலீசார் அவருக்கு எதிராக பிடிவார்ண்ட் உத்தரவை பிறப்பித்தனர். இதையடுத்து அவர் குருகிராமில் இருப்பதை கண்டறிந்து அவரை கைது செய்து கொல்கத்தாவுக்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. ஜூன் 13ஆம் தேதி வரை அவர் காவலில் இருப்பார். போலீசார் அவரை போலீஸ் காவலில் எடுக்க கோரிக்கை விடுத்த்து, பனோலி ஜாமீன் மனு கோரியிருந்தார். இரண்டு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன. போலீசார் அவரது மொபைல், லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Sharmishta Panoli: கங்கனா ரனாவத் திடீர் ஆதரவு
இந்நிலையில், நடிகரும், பாஜக பிரமுகருமான கங்கனா ரனாவத் ஷர்மிஷ்டா பனோலிக்கு ஆதரவு தெரிவித்து அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவில், "ஷர்மிஷ்டா பனோலி சில விரும்பத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான இளைஞர்கள் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார். அது போதுமானது. அவரை இதற்காக மேலும் கொடுமைப்படுத்தவோ, துன்புறுத்தவோ தேவையில்லை. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க | எமனாக வந்த கண்டெய்னர் லாரி 8 மாத கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்
மேலும் படிக்க | சென்னையில் இருந்து செல்லும் வந்தே பாரத்தில் No அசைவ உணவு? காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ