Home> India
Advertisement

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... நீண்ட நேரம் நீடித்த அதிர்வு - அதிர்ச்சியில் மக்கள்!

Delhi Earthquake: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் இன்று (ஜூலை 10) பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. காலை 9.04 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ஒரு நிமிடம் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... நீண்ட நேரம் நீடித்த அதிர்வு - அதிர்ச்சியில் மக்கள்!

Delhi Earthquake: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் இன்று (ஜூலை 10) பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. காலை 9.04 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ஒரு நிமிடம் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

Delhi Earthquake: ரிக்டர் அளவுக்கோளில் 4.4 ஆக பதிவு

முதற்கட்ட தகவல்களின்படி, 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கம் ஹரியானாவின் ஜஜ்ஜர் நகரை மையமாகக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஜஜ்ஜர் நகரம் தேசிய தலைநகரில் இருந்து 31 கிலோமீட்டருக்கும் சற்று தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

நிலநடுக்கத்தின் மையப்பகுதியான ஜஜ்ஜர் நகரில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள மேற்கு உத்தரபிரதேசத்தின் மீரட் மற்றும் ஷாம்லி வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. 

Delhi Earthquake: நீண்ட நேரம் நீடித்த நில அதிர்வு

நொய்டா மற்றும் குருகிராம் நகரங்களில் உள்ள அலுவலகப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் தங்களின் கணினிகள் குலுங்கின என்று ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து அவர்கள் தங்களின் அலுவலக கட்டடங்களில் இருந்து வெளியேறி, திறந்தவெளிக்கு வந்துள்ளனர்.

தேசிய நில அதிர்வு நிறுவனத்தின்படி (National Institute of Seismology), நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ., என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 10) காலை 9.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து வீட்டின் மின்விசிறிகள், பிற வீட்டுப் பொருட்கள் கடுமையாக குழுங்கியதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருக்கின்றனர். மேலும், இந்த நிலநடுக்கம் நீண்ட நேரத்திற்கு நீடித்ததாகவும், இதுவரை இந்தளவிற்கு நீண்ட நேரம் நீடித்ததில்லை என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Delhi Earthquake: NDRF அறிவுறுத்தல்

டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) பொதுமக்களுக்கு ஆலோசனை குறிப்பு ஒன்றை வெளியிட்டது. மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் கட்டடங்களை விட்டு வெளியே ஓடி, படிக்கட்டுகளில் பயன்படுத்தி கீழே இறங்கும்படியும் கேட்டுக் கொண்டது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது வாகனங்களை திறந்துவெளியில் நிறுத்தும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது ஏன்?

டெல்லியின் புவியியல் அமைப்பு காரணமாக நிலநடுக்கங்கள் அங்கு நிகழ்வது வாடிக்கையானதுதான். டெல்லி நில அதிர்வு மண்டலம் 4இல் அமைந்துள்ளது,  இங்கு நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாகும். டெல்லி - ஹரித்வார் ரிட்ஜ் (DHR), சோஹ்னா Fault, டெல்லி - மொராதாபாத் Fault மற்றும் மகேந்திரகர்-டெஹ்ராடூன் Fault உள்ளிட்ட பல Fault Lines பகுதிகளுக்கு அருகில் டெல்லி அமைந்துள்ளது.

Fault Lines என்பது பூமியின் மேலோட்டத்தில் ஏற்படும் முறிவுகள் ஆகும். அங்கு பூமிக்கு அடியில் இயக்கம் ஏற்படலாம், மேலும் இந்த இயக்கமே நிலநடுக்கங்களுக்கு முதன்மையான காரணமாகும். 1720ஆம் ஆண்டில் இருந்து பார்த்தால், ரிக்டர் அளவுகோலில் 5.5க்கு மேல் பதிவான ஐந்து நிலநடுக்கங்களால் டெல்லி நகரம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.6000 வரை ஊக்கத்தொகை... பெண்களுக்கும் சூப்பர் திட்டங்கள் - மாநில அரசு அதிரடி

மேலும் படிக்க | 11 பேரை காவு வாங்கிய கம்பீரா பாலம்... இனி 50 கி.மீ., சுத்தி தான் போகணும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More