ஜெய்ப்பூரில் உள்ள பல இனிப்பு கடைகளில், ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இனிப்புகளின் பெயர்களை மாற்றி உள்ளனர். அதாவது இனிப்புகளுக்கு பின்னால் இருக்கும் பாக் என்ற வார்த்தையை நீக்கி, ஸ்ரீ என்ற வார்த்தையை சேர்த்துள்ளனர். பாக் என்ற வார்த்தை பாகிஸ்தானை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதால், அந்த வார்த்தையை நீக்கி உள்ளனர்.
அதன்படி, மொட்டிப் பாக், மைசூர் பாக், ஆம்பாக், கோன்ட்பாக் போன்ற இனிப்புகளின் பெயரை மொட்டி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோன்ட் ஸ்ரீ, மைசூர் ஸ்ரீ என மாற்றம் செய்துள்ளனர். பாக் என்ற வார்த்தை இந்தியில் சர்க்கரை திரவத்தை குறிக்கிறது. அதுவே சமஸ்கிருதத்தில் பகவா என்பதில் இருந்து இந்த பாக் வார்த்தை வந்துள்ளது. இதன் பொருள் சமைக்கப்பட்ட அல்லது முதிர்ந்த என்பதாகும். இச்சூழலில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் மோதலை கருத்தில் கொண்டு பெயர் மாற்றம் செய்யப்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பெயர் மாற்றம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தியா முதலில் மறைமுக தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. பின்னர் ஆபரேஷன் சிந்தூர் என்ற இராணுவ நடவடிக்கையின் மூலம் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தரமட்டமாக்கியது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்க முயன்றது. ஆனால் பாகிஸ்தானின் அத்தனை முயற்சிகளையும் இந்தியா முறியடித்தது. பின்னர் மே 10ஆம் தேதி அன்று போர் நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேசத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜெய்ப்பூரில் இனிப்புகளில் பெயரில் கூட பாக் என்ற வார்த்தை இருக்க கூடாது என அந்த வார்த்தையை நீக்கி, ஸ்ரீ என்ற வார்த்தையை சேர்த்துள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மேலும் படிங்க: கேரளாவில் பரவும் கொரோனா.. மக்களே உசார்.. முககவசம் அணிய அறிவுறுத்தல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ