SIP Calculator: SIP (முறையான முதலீட்டுத் திட்டம்) என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு வழியாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், கோடிகளில் பணத்தை அள்ளலாம். அதுவும் வெறும் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் நீங்கள், ரூ.12.35 கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும்.
இந்நிலையில் நீங்கள் உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமானால், இந்த SIP எனப்படும் முறையான முதலீட்டு திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
முறையான முதலீட்டு திட்டம் (SIP):
முறையான நிதி திட்டத்தில் இணைவதன் மூலம் பொருளாதார ரீதியாக அச்சப்பட வேண்டியதில்லை. பெற்றோர் குழந்தை பிறந்தவுடன் நிதித் திட்டமிடலைத் தொடங்குவது நல்லது.
SIP சேமிப்பு திட்டம்:
பெரிய தொகையைச் சேமிக்க விரும்பினால், குழந்தை பிறக்கும்போதே SIP சேமிப்பு கனக்கை தொடங்கவும், இதன் மூலம் பல வகைகளில் நன்மை பெறலாம். சந்தையுடனான நேரடி பிணைப்பு இருப்பதால், SIP இல் உங்களுக்கு சில ஆபத்துகள் இருக்கும். ஆனால் இந்த SIP உங்களுக்கு சாத்தியமில்லாத வருமானத்தை அளிக்கும். மியூச்சுவல் ஃபண்ட் sip இன் நீண்ட கால வருமானம் 12% அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என்று கருதப்ப்படுகிறது.
ரூ.10,000 முதல் தொடங்கலாம்:
உங்கள் குழந்தை பிறந்ததும் 10000 ரூபாய்க்கு SIP ஐத் தொடங்கினால், அவர்களின் 15 வயதிற்குள் நீங்கள் 12 கோடி ரூபாய்க்கு மேல் சேமித்து வைக்கலாம். இதற்கு நீங்கள் ஒவ்வொரு வருடமும் உங்களது முதலீட்டுத் தொகையில் இருந்து10 சதவிகிதத்தை உயர்த்த வேண்டும்.
ரூ.12.35 கோடி வருவாய் பெறுவது எப்படி?
குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குப் பிறகு நீங்கள் 10,000 ரூபாய்க்கு SIP ஆரம்பிக்கிறீர்கள் என்றால் முதல் 12 மாதங்களில் மொத்தமாக நீங்கள் ரூ.1.2 லட்சத்தை முதலீடு செய்வீர்கள். அடுத்த ஆண்டு உங்களது முதலீட்டு தொகையை இன்னும் 10% அதிகரிப்பதன் மூலம் SIP கணக்கிற்கான அடுத்த 12 மாதங்களுக்கான மாதத்தவனை ரூ.11,000 ஆகிவிடும். இப்படி வருடா வருடம் 10% அதிகரிக்க வேண்டும்.
இந்த முறையில் SIP-யில் நீங்கள் 15 ஆண்டுகள் முதலீடு செய்வதன் மூலம் மொத்தமாக நீங்கள், 38 லட்சத்து 12 ஆயிரத்து 697 ரூபாயை முதலீடு செய்து இருப்பீர்கள். ஆனால் இதற்கான வட்டியான 12 சதவிகிதம் மூலம் 12 கோடியே 35 லட்சத்து 51 ஆயிரத்து 900 ரூபாய் மொத்த வருவாயாக கிடைக்கும்.
மேலும் படிக்க | அடி தூள்! கலைஞர் கனவு இல்லம் - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : எத்தனை பேருக்கு புதிதாக ரூ.1000 கிடைக்கும்?
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ரேஷன் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ