29 South Indian Actors Booked By ED : தென்னிந்தியாவில் டாப் நடிகர்களாக இருக்கும் 29 பேர் மீது, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இவர்கள் அனைவரும் அமலாக்கத்துறையின் கையில் சிக்க காரணம் என்ன? அவர்கள் மீது ஏன் இந்த டார்கெட்? இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
அமலாக்கத்துறை வழக்குப்பதிவு:
தொழிலதிபர் பஹனிந்த்ரா ஷர்மா என்பவர் மீது அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், தனது செயலியின் பயனார்களை தவறாக வழிநடத்திய குற்றத்திற்காகவும், இதனால் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
தெலங்கானாவின் சைபர்பாத் போலீஸாரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கானது, ED அதிகாரிகளின் கவனத்தை பெற்றது. அதன்படி, இந்த செயலியை ப்ரமோட் செய்த குற்றத்திற்காக நடிகர்கள் ரானா டகுபதி, விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
யார் மீது வழக்குப்பதிவு?
இதில் சம்பந்தப்பட்ட நடிகர்-நடிகைகள், இப்படி பயனாளர்களை ஏமாற்றியதாக சொல்லப்படும் செயலியின் ப்ரமோஷன் விளம்பரத்தில் நடித்திருக்கின்றனர். இதில், நடிகைகள் நிதி அகர்வால், வர்ஷினி, வசந்த கிருஷ்ணன்மஞ்சு லக்ஷ்மி, பிரனிதா சுபாஷ், ஸ்ரீமுகி, சில டிஜிட்டல் இன்ஃப்ளூவர்ன்ஸர், யூடீயூபர்கள் உள்ளிட்ட பலர் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா சொன்னது:
விஜய் தேவரகொண்டா பெட்டிங் செயலியை ப்ரமோட் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த அவர், அது சட்டத்திற்கு புறம்பான சூதாடும் செயலி இல்லை என்றும், திறனை வைத்து விளையாடும் செய்திதான் என்றும் கூறினார். அவரது வழக்கறிஞர் குழுவினர், விஜய் தேவரகொண்டா குறிப்பிட்டிருந்த செயலி, கேமிங் ஆப்தான் என்று உச்ச நீதிமன்றமே கூறியிருந்த விஷயத்தை குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
ராணா, இது குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார். இவருக்கும் அந்த செயலி ப்ரமோஷனுக்குமான தொடர்பு 2017ஆம் ஆண்டோடு முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. பிரகாஷ் ராஜ், தான் அந்த ஜங்க்லி ரம்மி ஆப்பிற்கு 2016ல் ப்ரமோஷன் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், அவர்களுடன் தான் போட்டிருந்த காண்ட்ராக்ட் 1 வருடத்திலேயே முடிந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த வழக்கு குறித்த மேலும் பல தகவல்கள் இன்னும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | சினிமா என்பது கணிக்க முடியாத கேம் - இயக்குனர் ராம் நெகிழ்ச்சி பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ