Home> Movies
Advertisement

விஜய்க்காக விட்டுக்கொடுத்த தனுஷ்! இவ்வளவு பெரிய மனசா? என்ன விஷயம்?

Dhanush To Join With H Vinoth Jana Nayagan : நடிகர் தனுஷ், விஜய்க்காக செய்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

விஜய்க்காக விட்டுக்கொடுத்த தனுஷ்! இவ்வளவு பெரிய மனசா? என்ன விஷயம்?

Dhanush To Join With H Vinoth Jana Nayagan : தமிழ் திரையுலகில் தற்போது டாப் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார் தனுஷ். நம் மொழியில் மட்டுமல்லாது, இந்தி மற்றும் ஆங்கில சினிமாவிற்குள்ளும் அடியெடுத்து வைத்திருக்கிறார். சமீபத்தில் இவர் விஜய்க்காக ஒரு விஷயத்தை விட்டுக்கொடுத்ததாக சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அது என்ன தெரியுமா?

விஜய்யின் கடைசி படம்..!

விரைவில் அரசியலில் முழு நேரமாக களம் காண இருப்பவர் நடிகர் விஜய். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக, திரையுலகில் நடித்து அனைவரையும் மகிழ்வித்த இவர், திரையுலகை விட்டு இப்படி திடீரென்று விலகுவது, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவரது கடைசி படமாக இருக்கிறது, ஜனநாயகன். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்போது இந்த படத்திற்கும் தனுஷுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஒரு சிலர், தனுஷுக்கு இவ்வளவு பெரிய மனசா என்றும் கேட்டு வருகின்றனர்.

விஜய்-காக தனுஷ் விட்டு கொடுத்தது!

ஜனநாயகன் படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் துணிவு படத்தை எடுத்து முடித்த பிறகு, கைகோர்க்க இருந்தது தனுஷ் உடன்தான். அந்தப் படம் குறித்த பேச்சு வார்த்தை முடிவுப்பெறும் தருவாயில் இருந்த சமயத்தில்தான், விஜய்‍யின் ஜனநாயகன் படத்தை இயக்க ஹெச்.வினோத்திற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால் தனுஷை வைத்து படத்தை இயக்க முடியாத நிலைக்கு ஆளாகியிருக்கிறார், வினோத். அவரது நிலையை புரிந்து கொண்ட தனுஷ், “நீங்கள் முதலில் விஜய் அண்ணாவை வைத்து படம் இயக்குங்கள் வினோத்” என்று கூறியிருக்கிறார். இவர் கொடுத்த உந்துதல், வினோத்தை விஜய் படத்தை இயக்க வைத்துள்ளது. 

அடுத்த படம் யாருடன்?

ஜனநாயகன் படத்தை அடுத்து, ஹெச்.வினோத் யாருடன் கைக்கோர்க்க இருக்கிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது. ஏற்கனவே, தனுஷுடன் கூட்டணி வைக்க இருந்த வாய்ப்பு நழுவி போய்விட்டதால், அவர் அடுத்ததாக அவருடைய படத்தை இயக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில், தனுஷ் வரும் 2 ஆண்டுகளுக்கு உறங்க கூட சரியாக டைம் இல்லாத அளவிற்கு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இதனால், அவர் ஹெச்.வினோத்துடன் எப்படி கைக்கோர்ப்பார் என்பது தெரியவில்லை.

தனுஷும் ஹெச்.வினோத்தும் கைக்கோர்க்க இருக்கும் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிப்பதாகவும், இதற்கு சாம்.சி.எஸ் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஒருவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இதற்கு சாம்.சி.எஸ்-ம் இமோஜியால் ரிப்ளை செய்திருந்தார். எனவே, அவர் இதை ஆமோதிப்பதாக ரசிகர்கள் எடுத்துக்கொண்டனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன் நிலை என்ன?

ஹெச்.வினோத், தற்போது ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இதில், விஜய்யின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்ததாக கூறப்படுகிறது. இவருக்கான காட்சிகள் சென்னை மற்றும் கொடைக்கானலில் நடந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவின் பட காட்சிகளும் நடந்து முடிந்ததாம். இப்போது இதர காட்சிகளின் ஷூட்டிங் நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | உள்ளே மினி பார், செயற்கைகோள் போன்-விஜய்யின் பிரைவேட் ஜெட்டின் விலை என்ன தெரியுமா?

மேலும் படிக்க | ஜன நாயகன் போஸ்டரில் மறைந்திருக்கும் ரகசியம்! விஜய் கையில் ‘இதை’ கவனிச்சீங்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More