Home> Movies
Advertisement

கூலி பட நடிகர் திடீர் கைது... அதிர்ச்சியில் சினிமா உலகம் - என்ன காரணம்...?

Soubin Shahir Arrested: பிரபல மலையாள திரைப்பட நடிகரான சௌபின் சாஹிர், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தொடர்பான பணமோசடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூலி பட நடிகர் திடீர் கைது... அதிர்ச்சியில் சினிமா உலகம் - என்ன காரணம்...?

Soubin Shahir Arrested: கடந்த 2024ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இத்திரைப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டிலும் வசூலில் சக்கைப்போடு போட்டது. இத்திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தமிழ் படங்கள் கூட அந்தளவிற்கு போகவில்லை. மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு அந்தளவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

Soubin Shahir: சௌபின் சாஹிர் மீதான புகார்

இந்த திரைப்படத்தை நடிகர் சௌபின் சாஹிர், அவரது தந்தை பாபு சாஹிர் மற்றும் சான் ஆண்டனி ஆகிய மூன்று இணைந்து தயாரித்தனர். இந்த திரைப்படத்தை தயாரிக்க சிராஜ் வலியவீட்டில் ஹமீத் என்பவரிடம் இருந்து சுமார் ரூ.7 கோடியை பெற்றதாகவும், பதிலுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் லாபத்தில் 40% வழங்குவதாகவும் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், படம் வெளியான பின்னர் சௌபின் சாஹிர் அந்த 40% லாபத்தையோ, ரூ.7 கோடி பணத்தையோ கூட திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக சிராஜ் புகார் அளித்துள்ளார்.

Soubin Shahir: போலீசார் சமர்பித்த அறிக்கை

இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, மரடு காவல்துறையினர் இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு, சௌபின் சாஹிர், அவரது தந்தை பாபு சாஹிர் மற்றும் மற்றொரு தயாரிப்பாளர் சான் ஆண்டனி ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். 

குறிப்பாக, போலீசார் அளித்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரும் புகார் அளித்தவரிடம் பண மோசடியில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, குற்றவாளிகள் மூன்று பேரும் இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர், அவர்கள் மனுவே தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

Soubin Shahir: பிணையில் விடுவிப்பு

சௌபின் சாஹிர், பாபு சாஹிர், சான் ஆண்டனி ஆகியோரிடம் போலீசார் இன்று நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், மூன்று பேரும் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  

Who Is Soubin Shahir? : யார் இந்த சௌபின் சாஹிர்?

சௌபின் சாஹிர் மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் எனலாம். சிறுவயதிலேயே திரைப்படத்துறைக்குள் நுழைந்த சௌபின் சாஹரின் தந்தை பாபு சாஹிர் பல்வேறு பிரபல மலையாளத் திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும், தயாரிப்பு கண்காணிப்பாளராகவும் இருந்துள்ளார். இவரை தொடர்ந்து சௌபின் சாஹிரும் ஃபாசில், சித்திக், சந்தோஷ் சிவன், ராஜீவ் ரவி, அமல் நீரத் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். 

தொடர்ந்து, உதவி இயக்குநராக இருந்த போதே 2002ஆம் ஆண்டில் பாசில் இயக்கிய ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் படத்தில் PT வாத்தியாராக நடித்திருந்த சௌபின் சாஹிருக்கு அந்த கதாபாத்திரம் நல்ல அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. தொடர்ந்து சார்லி, மகேஷிண்டே பிரதிகாரம், கலி, கம்மட்டிப்பாடம், கும்பளங்கி நைட்ஸ், சுடானி ஃபிரம் நைஜீரியா போன்ற படங்களும் ரசிகர்களின் மனதில் இவரை நன்கு பதியவைத்தது எனலாம்.

மேலும் படிக்க | போதை பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமின்!

மேலும் படிக்க | ஆளே மாறிப்போன நடிகர் அப்பாஸ்! வைரலாகும் சமீபத்திய புகைப்படங்கள்..

மேலும் படிக்க | ரஜினி ரசிகர்கள் அப்செட்! கூலி ரிலீஸ் ஒத்திவைப்பு? காரணம் இதுதான்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More