Home> Movies
Advertisement

ஓடிடியில் வெளியாகிறதா 3BHK.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

3BHk திரைப்படம் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான தகவல் கூடிய விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஓடிடியில் வெளியாகிறதா 3BHK.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

3BHK OTT Release Date: சித்தார்த், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 3BHK. மீதா ரகுநாத் மற்றும் தேவயானி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தினர்களுக்கும் இந்த படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன் 8 தோட்டாக்கள், குருதியாட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

குடும்ப டிராமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த் மகனாகவும், சரத்குமார் தந்தையாகவும் நடித்துள்ளார். தேவயானி தயாார் கதாப்பாத்தித்திலும், மீதா ரகுநாத் மகள் கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை தினேஷ், பி கிருஷ்ணன் மற்றும் ஜிதின் ஆகியோர் கவனித்திருக்கின்றனர். படத் தொகுப்பாளராக வேலைகளை கணேஷ் சிவா பணியாற்றி இருக்கிறார். அதுபோல இந்த படத்தை பல ஹிட் திரைப்படங்களை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பாக அருண் விஸ்வா தயாரித்துள்ளார். இந்த படம் கடந்த ஜூலை 4 ஆம் தேதி வெளியானது.

3BHK திரைப்படம் வீடு வாங்க வேண்டும் என்று கனவோடு இருக்கும் பல நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி இருக்கிறது. சித்தார்த் மற்றும் சரத்குமாரின் நடிப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படம், முதல் நாளில் உலகளவில் சுமார் ரூ.1.5 கோடி வரை கலெக்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மூன்று நாட்களில் 4.7 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை 3BHk திரைப்படம் உலகளவில் ஐந்து நாட்களில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்திற்கான வசூல் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு படம் திரையரங்கில் வெளியானால் 4 வாரம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியாகும். இந்நிலையில் தற்போது சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கும் 3BHk திரைப்படம் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான தகவல் கூடிய விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிங்க: திருமணத்திற்கு 1 மாதம் முன் கேன்சர்.. முதன்முறையாக முதல் மனைவி பற்றி பேசிய விஷ்ணு விஷால்!

மேலும் படிங்க: வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட இந்திரஜா சங்கர்! தமிழக அரசு கண்டனம்..என்ன விஷயம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More