Actor Krishna Arrested In Drug Case : போதை பொருள் வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவருடன் சேர்த்து அவரது சப்ளையரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை பொருள் வழக்கு:
நடிகர்கள் ஸ்ரீகாந்தும் கிருஷ்ணாவும் போதை பொருள் வழக்கில் சிக்கியிருப்பது திரை உலகினரையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. நடிகர் ஸ்ரீகாந்திற்கு அதிமுக-வை சேர்ந்த பிரசாத் என்பவர் போதை பொருட்களை வழங்கியதாக கூறியிருக்கிறார். இதையடுத்து, ஸ்ரீகாந்தை கைது செய்து போலீஸார் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தனர். இதில் அவர் போதை பொருள் உபயோகித்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், அவர் கைது செய்யப்பட்டார்.
தான் நடித்த ஒரு படத்திற்கு சம்பள பாக்கி இருந்ததாகவும், இதை கேட்ட போதெல்லாம் போதை மருந்துகளை கொடுத்து தன்னை அப்படத்தின் இணை தயாரிப்பாளர் பழக்கி விட்டதாகவும் கூறியிருக்கிறார். இவரை வரும் ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணா கைது:
நடிகர் கிருஷ்ணாவிற்கும் போதை பொருள் வழங்கப்பட்டதாக விசாரணையில் தகவல் கிடைத்தது. இவர் ஊரில் இல்லாததால், விரைவில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் போனை ஸ்விட்ச் ஆப் செய்து தலைமறைவானார். இவரை பிடிக்க போலீஸார் ஐந்து தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். இதையடுத்து நேற்று இரவு காவல் துறையினர் முன்பு ஆஜரான அவர், தனக்கு போதை பொருள் பழக்கம் இல்லை என்று கூறினார். மேலும், தனக்கு இரப்பை நோய் பிரச்சனை மற்றும் இதயத்துடிப்பு அதிகமாகும் பிரச்சனை இருப்பதாகவும், இதற்கான மாத்திரைகளை மட்டும் எடுத்துக்கொள்வதாகவும் கூறினார். இதையடுத்து, இவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதோடு, விடிய விடிய இவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் இவரும், இவருக்கு போதை மருந்து சப்ளை செய்த குற்றத்திற்காக கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஸ்ரீகாந்தை சிக்க வைத்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர், பிரதீப். இவர், கிருஷ்ணாவிற்கும் போதை பழக்கம் இருப்பதாக கூறியதை அடுத்து இந்த வழக்கு விசாரணையானது நடந்தது. இதில், ஸ்ரீகாந்துக்கும் கிருஷ்னாவிற்கும் இடையாயான செல்போன் உரையாடல்கள், அவர்களது மெசஜ்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் ஆய்வு செய்தனர். 2020ஆம் ஆண்டு முதல் அவர்கள் டெலிட் செய்த மெசஜ்களை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் நண்பர்கள் சிலரிடம் Code Word-ல் பேசியது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில்தான், கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை! போதை பொருள் பயன்படுத்தினாரா? இல்லையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ