Bail For Srikanth And Krishna : சில நாட்களுக்கு முன்பு, போதை பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்தும் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு தற்போது நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த்-கிருஷ்ணாவுக்கு ஜாமின்:
நடிகர்கள் ஸ்ரீகாந்தும் கிருஷ்ணாவும் போதை பொருள் உபயோகித்த குற்றத்திற்காக கைதானது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இருவரும் நீதிமன்ற காவலில் இருந்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர்களின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. இவர்களுக்கு தற்போது நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் வழக்கின் விசாரணை அதிகாரிகள் முன்பு தினமும் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
போதை பொருள் வழக்கு:
சென்னையில் இருக்கும் ஓரு பிரபல பாரில் நடந்த பிரச்சனையால் கைது செய்யப்படவர் அதிமுக முன்னாள் நிர்வாகி, பிரசாந்த். இவரை விசாரிக்கும் போது, இவரிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கிய தகவல் வெளியானது. இதையடுத்து, ஸ்ரீகாந்தை பிடித்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். ரத்த பரிசோதனையில், ஸ்ரீகாந்த் போதை பொருள் உபயோகித்தது தெரிய வந்தது.
இதன் தொடர்ச்சியாக அவர் விசாரணையில் தனக்கு போதை பழக்கம் இருப்பதை ஒப்புக்கொண்டார். அதோடு, போதை பழக்கம் எப்படி வந்தது என்றும் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இன்னொரு முக்கிய குற்றவாளி பிரதீப், தான் நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதை மருந்துகளை விற்றதாக தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு வெளியூரில் இருந்த கிருஷ்ணாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இவர் தலைமறைவானதால் இவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இறுதியில் போலீஸ் முன்பு ஆஜரான இவர் தனக்கு போதை பழக்கமே இல்லை என்று தெரிவித்தார். ஆனால், குற்றம் உறுதியானதால் அவரும் கைது செய்யப்பட்டார்.
ஜாமின் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்:
நீதிமன்ற காவலில் இருந்த இவர்கள் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து கிருஷ்ணாவும் ஸ்ரீகாந்தும் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்ரீகாந்த் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், அவரிடம் இருந்து எந்தவித போதை பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார். அதே போல, கிருஷ்ணாவின் தரப்பிலும் மருத்துவ பரிசோதனையில் கிருஷ்ணா போதை பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது. இவர்களது மனுவை கூர்ந்து விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | போதை பொருள் வழக்கு: அடுத்து சிக்கப்போகும் முன்னணி நடிகை! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ