யானை, என்னை அறிந்தால், தவம், வணங்கான் உள்ளிட்ட தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான பிரபல திரைப்பட நடிகர் அருண்விஜய் இன்று திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வந்த அவர் சம்பந்த விநாயகரை தரிசித்து தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மனை வழிபட்டு நவகிரக சன்னதியில் சாமி தரிசனம் செய்தார், தொடர்ந்து அவருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கி வாழ்த்தினார்.
அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்த நடிகர் அருண் விஜயை சந்தித்த ஆந்திர தெலுங்கானா பக்தர்கள் கோவில் ஊழியர்கள் என பலரும் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். முன்னதாக நேற்று இரவு கிரிவலம் மேற்கொண்ட நடிகர் அருண் விஜய் கிரிவலப் பாதையில் சோடா கடை வைத்து வியாபாரம் செய்து வரும் பெண்மணிக்கு வியாபாரம் செய்வதற்கு பணம் கொடுத்து உதவி செய்தார், தொடர்ந்து ரசிகரின் திருமணத்திற்கு செல்ல முடியாததால் திருமண தம்பதிகளை அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
திருக்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பொழுதெல்லாம் சந்தோஷம் என்றும், பிரதோஷ தினமான நேற்று இரவு விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டது தனக்கு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகவும் தெரிவித்தார், கடந்த ஓராண்டிற்கு முன்பு இத்திருக்கோவில் அண்ணாமலையாரை தரிசித்ததாகவும் தொடர்ந்து இரட்டை தலை, இட்லி கடை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்ததால் சரியாக அண்ணாமலையாரை தரிசிக்க முடியவில்லை என்றும், தற்பொழுது இரண்டு படங்களும் நிறைவடைந்த நிலையில் மீண்டும் அண்ணாமலையார் அழைத்ததால் இங்கு வந்து தரிசனம் செய்ததாகவும் மன மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்
தொடர்ந்து பேசியவர் கடந்த காலங்களில் இருந்ததை விட தற்போது கிரிவலப் பாதையில் மிகுந்த வெளிச்சம் நிறைந்து காணப்படுவதாகவும், வெளி மாநில பக்தர்கள் அதிக அளவு வருவதால் பல்வேறு வசதிகளை செய்து தருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். நடிகர் தனுஷ் அவரது இயக்கத்தில் தான் நடித்திருப்பது வித்தியாசமான அனுபவம் அவர் ஓர் தெளிவான இயக்குனர் என்றும், இது நாள் வரை அவரை நடிகராக பார்த்திருந்த வேளையில் இயக்குனராக நம்மை இயக்குவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளாவதாகவும் அவர் அனைத்து படங்களையும் அனைவரையும் கவரும் வகையிலும் இணைக்கும் வகையிலும் இயக்குவதாக தெரிவித்தார்.
எந்த நேரமும் தனுஷ் கதை எழுதிக் கொண்டே இருப்பதாகவும் கடுமையான உழைப்பாளி என்றும் அவரைப் பார்க்கும் பொழுது நமக்குள் ஓர் உத்வேகம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார், இயக்குனரும் நடிகருமான தனுஷிடம் நிறைய கதைகள் உள்ளதாகவும், மேலும் பல்வேறு சிறந்த படங்களை அவர் இயக்க வேண்டும் என்றும் ஓர் தெளிவான இயக்குனர் அவர் என்பதும் கூறினார். சிறுவயதில் தெளிவான பக்குவமான இயக்குனராக தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கும் தன ஓசை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளதாகவும் அதிக சிந்தனையும் தெளிவும் கொண்டவர் என்றும் நம்முடைய கலாச்சாரத்தையும் உணர்ச்சியையும் இணைத்து கதைகள் தனுஷ் அமைத்து வருவதாகவும், தற்போதைய காலகட்டத்திற்கு படத்தில் உணர்ச்சி அதிக அளவு இருக்க வேண்டும் என்றும் அதனை பக்குவமாக கையாள்வதில் அவர் திறமை மிக்கவர் என்றும் தனக்கு அவர் இயக்குவது மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
நடிகர் சங்க கட்டடம் கிட்டத்தட்ட முடிந்துள்ளதாகவும் முதற்கட்டமாக கலையரங்கம் பணி விரைவில் முடிவடைந்து பின்னர் படிப்படியாக நடிகர்கள் கனவை நினைவாக்கும் வகையில் கட்டடம் எழுந்து நிற்கும் என்றும் இதற்காக பாடுபட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் படிக்க | முத்தமழை பாடலுக்கு பின்..அதிகம் கேட்கப்படும் 5 சின்மயி பாடல்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ