Home> Movies
Advertisement

அதுக்குள்ள ஓடிடியில் வெளியாகும் குபேரா.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Kuberaa Movie OTT Release: தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் குபேரா. தற்போது இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதுக்குள்ள ஓடிடியில் வெளியாகும் குபேரா.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Kuberaa Movie OTT Release Date: தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் குபேரா. வெளியான நான்கு நாட்களில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

குபேரா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். இதற்கு முன்னர் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மற்றொரு தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோரும் நடித்துள்ளனர். ராம் மோகன் ராவ் மற்றும் சுனில் நரங் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடா, தெலுங்கு என ஐந்து மொழிகளில் வெளியானது.

இதுதான் கதை:
படத்தின் தொடக்கத்தில் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருக்கும் ஜிம் சர்ப் மத்திய அரசின் எரிவாயு திட்ட ஒப்பந்தத்தை கைப்பற்ற முக்கிய அமைச்சர்களுடன் ஒப்பந்தம் செய்கிறார். இதற்காக ஒரு லட்சம் கோடி லஞ்சமாக கேட்கின்றனர், இந்த வேலையை சரியாக முடிப்பதற்காக ஜெயிலில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி நாகார்ஜுனாவை வேலைக்கு அமர்த்துகின்றனர். நாகார்ஜுனா இந்த வேலையை கச்சிதமாக செய்து முடிக்க நான்கு பிச்சைக்காரர்களை தேர்வு செய்கிறார், அதில் ஒருவராக தனுஷ் உள்ளார். அவர்களின் பெயரில் சுவிஸ் வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்து பணத்தை மாற்ற திட்டமிடுகின்றனர். இந்த உண்மை தனுஷுக்கு தெரிய வர அவர்களிடம் இருந்து தப்பித்து விடுகிறார். இறுதியில் தனுசை அவர்கள் பிடித்தார்களா? இல்லையா? அவ்வளவு பணத்தை வைத்து தனுஷ் என்ன செய்தார்? இறுதியில் என்ன ஆனது என்பதே குபேரா படத்தில் கதை. 

வசூல் நிலவரம் என்ன?
இதனிடையே படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டில் மட்டுமே இந்த படம் ரூ. 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி மூன்று நாட்களில் குபேரா படம் உலகளவில் 55 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

எந்த ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகிறது?
இந்நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் குபேரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் எந்த தளத்தில் வெளியாகப் போகிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குபேரா படத்தின் OTT உரிமைத்தை முன்னணி ஸ்ட்ரீமிங் நிறுவனமான அமேசான் பிரைம் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமைகள் சுமார் ரூ.47 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடிய விரைவில் படம் ஓடிடி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | நடிகர் ஸ்ரீகாந்த் கைது! இன்னொரு நடிகரும் சிக்குவாரா? வழக்கின் முழு பின்னணி என்ன?

மேலும் படிக்க | விஜய் அம்மா: பாடகி சோபாவின் எவர்கிரீன் ஹிட்ஸ் பாடல்கள்...காலத்தை கடந்த குரல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More