Drug Scandal Case Krishna Investigation : பிரபல நடிகர் கிருஷ்ணா, போதை பொருள் வழக்கில் போலீஸார் முன்பு நேற்று ஆஜரானார். அவரிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை நடத்தி இருக்கின்றனர். இதில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் தனது வாக்குமூலத்தில் என்ன கூறினார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
போதை பொருள் வழக்கு:
அடிதடி வழக்கில் கைதான அதிமுக உறுப்பினர் பிரசாத், பாேதை பொருட்களை நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்னாவிற்கு விற்றதாக வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்த், போலீஸாரால் சிலநாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்பட்டது. இதில், அவர் போதை மருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது உறுதியானது.
இந்த போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதனால், வரும் ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இவரை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தான் நடித்த ஒரு படத்திற்கு இணை தயாரிப்பாளராக இருந்தவர் சம்பளம் கேட்ட போது, அதற்கு பதிலாக போதை மருந்துகளை கொடுத்து தன்னை பழக்கப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
தலைமறைவான கிருஷ்ணா?
போதை பொருள் வழக்கில், நடிகை கிருஷ்ணாவுக்கும் சப்ளை செய்ததாக சம்பந்தப்பட்ட குற்றவாளி தெரிவித்தார். கிருஷ்ணா, உள்ளூரில் இல்லாததால் அவரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, நடிகர் கிருஷ்ணாவின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. இவரை பிடிக்க, போலீஸார் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இயக்குநர் விஷ்ணு வரதனின் சகோதரரான கிருஷ்ணா, கழுகு படம் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். சமீபத்தில் தனது தோழியை 2ஆம் திருமணம் செய்திருந்தார். இதையடுத்து போதை பொருள் வழக்கில் போலீஸார் அவரை தேடி வந்தது அவருக்கு தெரிய வந்தது. நேற்று இரவு போலீசார் முன் ஆஜரான அவரை நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரது ரத்த மாதிரிகளும் சேமிக்கப்பட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து போலீஸார் இவரிடம் விடிய விடிய கெடுபிடி விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணா கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்:
கிருஷ்ணா, போலீஸாரின் விசாரணையில் தான் போதை பொருட்களை பயன்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார். தனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதாலும், இதய துடிப்பு அதிகமாக இருப்பதாலும் அதற்கான மருந்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு வருவதாக கூறியிருக்கிறார். மேலும், இந்த காரணத்தால் தன்னால் போதை மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறியிருக்கிறார். பிராத்திடம் தான் போதை மருந்து வாங்கியதாக கூறப்படுவது உண்மை இல்லை என்றும் கூறியிருக்கிறார். இதில் ஹைலைட்டாக நீங்கள் தேடும் கிருஷ்ணா நான் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
கிருஷ்ணா, போலீஸாரின் விசாரணையில் தான் போதை பொருட்களை பயன்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார். தனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதாலும், இதய துடிப்பு அதிகமாக இருப்பதாலும் அதற்கான மருந்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு வருவதாக கூறியிருக்கிறார். மேலும், இந்த காரணத்தால் தன்னால் போதை மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறியிருக்கிறார். பிராத்திடம் தான் போதை மருந்து வாங்கியதாக கூறப்படுவது உண்மை இல்லை என்றும் கூறியிருக்கிறார். இதில் ஹைலைட்டாக நீங்கள் தேடும் கிருஷ்ணா நான் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இன்னும் சில கேள்விகளுக்கு விடை கிடைக்காததால் கிருஷ்ணாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ