Home> Movies
Advertisement

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட இந்திரஜா சங்கர்! தமிழக அரசு கண்டனம்..என்ன விஷயம்?

TN Government Fact Check Indraja Shankar Video : ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, சமீபத்தில் வெளியிட்டிருக்கும் வீடியாே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்கள் அந்த வீடியோவில் பேசியிருக்கும் கருத்துகளுக்கு தமிழ் நாடு அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது.  

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட இந்திரஜா சங்கர்! தமிழக அரசு கண்டனம்..என்ன விஷயம்?

TN Government Fact Check Indraja Shankar Video : சின்னத்திரையுலகில் மிமிக்கிரி-காமெடி கலைஞராக அறிமுகமாகி, இப்போது பெரிய நட்சத்திரமாக இருப்பவர் ரோபோ சங்கர். இவரது மனைவி பிரியங்காவும் சில படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். இவரது மகள் இந்திரஜா சங்கரும் சினிமா நடிகைதான். இவரது குடும்பமே தற்போது மீடியாவில் ஜொலிக்கும் குடும்பமாக இருக்கிறது.

இந்திரஜா சங்கர்:

இந்திரஜா சங்கர், விஜய்யின் பிகில் படத்தில் ‘பாண்டியம்மா’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனார். இந்த படத்திற்கு பிறகு அவர், அதிதி ஷங்கருடன் சேர்ந்து கொம்பன் படத்திலும் நடித்தார். பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

22 வயதாகும் இந்திரஜாவிற்கும், அவரது தாய் மாமாவான கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

வெளியிட்ட வீடியோ..

இந்திரஜாவும், அவரது கனவரும் இப்போது பெரிதாக எந்த டிவி நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் ஆக்டிவாக இல்லை. ஆனால், தங்களுக்கென்று தனியாக யூடியூப் சேனல் ஆரம்பித்து, தனது குழந்தையை வைத்தே சில கண்டெண்டுகளை ஆரம்பித்து அதில் வெளியிட்டு வருகின்றனர். அப்படி அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசிய விஷயம்தான் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னதாக பிறந்து 6 மாதங்களான குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் ஹீக்ரு பயிற்சி பள்ளிக்கு ப்ரமோட் செய்து இந்திரஜாவும் அவரது கணவரும் குழந்தையை வைத்து வீடியோ போட்டனர். இது, கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இதையடுத்து, இதற்கு விளக்கம் கொடுத்து இருவரும் ஒரு வீடியோவை வெளியிட்டனர்.

இந்திரஜாவும் அவரது கணவர் கார்த்திக்கும் பகிர்ந்த வீடியோவில், தமிழ்நாட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு தற்போது சிந்தனை திறன் குறைந்து விட்டதாக கூறியிருந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சிந்தனை திறன் இப்போது குழந்தைகளுக்கு இல்லை என ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் தெரிவித்து இருந்தனர். 

மத்திய அரசு, மூளை செயல்படுத்துதல் பயிற்சி முறைக்காக தனியாக பட்ஜெட் ஒதுக்கியிருப்பதாக கூறிய அவர்கள், குழந்தைகள் பிறந்தவுடன் அங்கன்வாடியில் சேர்க்கும் திட்டத்தை அரசு வகுத்துள்ளதாகவும் கூறியிருந்தனர். 

தமிழக அரசு கண்டனம்..

தமிழக அரசின் Fact Check குழு, இந்திரஜாவும அவரது கணவரும் பேசிய சர்ச்சைக்குரிய விஷயத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்கள் வீடியோவில் குறிப்பிட்ட திட்டதில், எந்த இடத்திலும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிரிக்கும் வகையில் எதுவும் குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. 

கையில் போன், கேமரா, மைக் இருக்கிறது என்பதற்காக இப்படி பொய்யான தகவல்களை ஒருவர் கூறுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிலர் தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்த போதிலும், அது எதற்குமே பதில் அளிக்காமல் ரோபோ சங்கரின் மகளும் கணவரும் ஜாலியாக ரீல்ஸ் செய்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் படிக்க | டாப் 10 உலக திரைப்படங்கள்! லிஸ்டில் ஒரே ஒரு இந்திய படம்-அதுவும் தமிழ் படம்! எது தெரியுமா?

மேலும் படிக்க | ஓஹோ எந்தன் பேபி படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More