Home> Movies
Advertisement

ஓஹோ எந்தன் பேபி படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

Oho Enthan Baby Review Tamil : ருத்ரா, மிதிலா பால்கர் நடித்துள்ள ஓஹோ எந்தன் பேபி (Oho Endhan Baby) படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் திரை விமர்சனத்தை பற்றி பார்ப்போம். 

ஓஹோ எந்தன் பேபி படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

Oho Enthan Baby Review Tamil : தமிழ் சினிமாவில் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள கிருஷ்ணகுமார் ராமகுமார் ஓஹோ எந்தன் பேபி (Oho Endhan Baby) படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா அறிமுகமாகியுள்ளார். மேலும் விஷ்ணு விஷாலும் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்துள்ளார். இவர்களை தவிர மிதிலா பால்கார், மிஷ்கின், கருணாகரன், நிர்மல் பிள்ளை ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் படத்திற்கு இசையமைக்க, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்றைய இளைஞர்களின் காதலை மையமாக வைத்து ஓஹோ எந்தன் பேபி (Oho Endhan Baby) படம் உருவாகியுள்ளது. இந்த வாரம் படம் திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. 

படத்தின் கதை 

சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவில் நாயகன் ருத்ரா நடிகர் விஷ்ணு விஷால் இடம் கதை சொல்கிறார். ருத்ரா சொன்ன இரண்டு கதையுமே விஷ்ணு விஷாலுக்கு பிடிக்காமல் போக, ஏதாவது காதல் கதை இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன் என்று தெரிவிக்கிறார். அந்த சமயத்தில் தன்னுடைய சொந்த காதல் கதையை விஷ்ணு விஷால் இடம் கூறுகிறார் ருத்ரா. அது விஷ்ணு விஷாலுக்கு பிடித்து போகவே இந்த கதையை படமாக எடுத்தால் நான் நடிக்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் அதில் ஒரு பிரச்சனை உள்ளது, அதனை நாயகன் ருத்ரா சரி செய்தாரா? இறுதியில் அவரது இயக்குனர் கனவு நனவானதா இல்லையா என்பதை சொல்லும் படம் தான் ஓஹோ எந்தன் பேபி (Oho Endhan Baby). 

முற்றிலும் புதிய முகங்களுடனும் புதிய ஐடியாக்கள் உடனும் உருவாகி உள்ள படம் தான் ஓஹோ எந்தன் பேபி (Oho Endhan Baby). படத்தில் தெரிந்த முகங்கள் என்றால் அது விஷ்ணு விஷால், மிஷ்கின் போன்ற சிலர் மட்டும் தான். இதுவே இந்த படத்திற்கு பெரிய பக்க பலமாக உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் படத்தில் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக மிதிலா பால்கர் மீரா என்ற கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார். எமோஷனல் காட்சிகளிலும், வசனங்களிலும் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அறிமுக நாயகன் ருத்ரா எமோஷனல் காட்சிகளில் சிரமப்பட்டாலும் நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு நல்ல ஒரு புதுவரவு. 

ஓஹோ எந்தன் பேபி படத்தில் ஒரு நடிகராகவே விஷ்ணு விஷால் நடித்துள்ளார். அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. இவர்கள் அனைவரையும் தாண்டி மிஸ்கின் ஒரு சில காட்சிகளே வந்தாலும் அந்த காட்சிகள் முழுவதையும் தன் வசப்படுத்துகிறார். அவருக்கு என்று தனி விசில் சத்தங்கள் பறக்கிறது. நாயகனின் நண்பராக வரும் நிர்மல் பிள்ளை, சித்தப்பாவாக வரும் கருணாகரன் ஆகியோரும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளனர். 

இன்றைய தலைமுறை காதலில் உள்ள பிரச்சனைகளை பற்றி பேசும் படமாக ஓஹோ எந்தன் பேபி படம் அமைந்துள்ளது. ஈகோ மற்றும் புரிதல் இல்லாமல் ஒரு காதல் உறவு எப்படி உடைந்து, சிதைந்து போகிறது என்பதை நல்ல ஒரு திரை கதையின் மூலம் கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார். பல காட்சிகள் புதிதாக இருப்பதால் ரசிக்க வைக்கிறது. ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. 

மொத்தத்தில்..

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஓப்பனிங் மற்றும் பினிசிங் இருந்தாலும் இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். அதே போல நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையும், பிரிவுக்கான காரணமும் இன்னும் அழுத்தமாக சொல்லப்பட்ட இருந்திருக்கலாம். ஓஹோ எந்தன் பேபி இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற ஒரு காதல் படம்.

மேலும் படிக்க | விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ள Phoenix படம் எப்படி? திரை விமர்சனம் இதோ!

மேலும் படிக்க | சித்தார்த்தின் 3 BHK படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More