8th Pay Commission: 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தவுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மட்டுமல்லாமல் பல வித அலவன்சுகளிலும் ஏற்றம் இருக்கும். மொத்த ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? பல்வேறு கிரேட் பே ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம்.
8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 -க்குள் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இதன் அமலாக்கத்திற்கு பிறகு அடிப்படை சம்பளம், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு (TA) ஆகியவற்றில் எவ்வளவு ஏற்றம் இருக்கும்? சில உதாரணங்கள் மூலம் இதை இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம். தேசிய ஓய்வூதிய முறை (NPS) மற்றும் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்திற்கு (CGHS) ஊழியர்களின் திருத்தப்பட்ட பங்களிப்பு என்னவாக இருக்கும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். மதிப்பீடுகளுக்காக ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வைத்துக்கொள்ளலாம்.
7வது ஊதியக் குழுவில் HRA விகிதங்கள் அடிப்படை ஊதியத்தில் 8 சதவீதம் (Z வகுப்பு நகரங்கள்), அடிப்படை ஊதியத்தில் 16 சதவீதம் (Y வகுப்பு நகரங்கள்) மற்றும் அடிப்படை ஊதியத்தில் 24 சதவீதம் (X வகுப்பு நகரங்கள்) ஆக உள்ளது. கடந்த ஆண்டு அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியபோது, விகிதங்கள் முறையே 10 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 30 சதவீதமாக திருத்தப்பட்டன. ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து பணியிடத்திற்குச் செல்ல போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இது ஊழியரின் பதவி மற்றும் பயண இடத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதன் வரம்பு வரம்பு ரூ.900 முதல் ரூ.7,200 வரை மாறுபடும்.
NPS பங்களிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 10 சதவீதத்தை தங்கள் NPS கணக்கில் செலுத்துகிறார்கள். அரசாங்கத்தின் பங்களிப்பு 14 சதவீதம். சம்பளக் கமிஷனில் சம்பளம் திருத்தப்பட்டவுடன், NPS பங்களிப்பு தானாகவே திருத்தப்படும். CGHS கட்டணங்கள்: மத்திய அரசானது நாடு முழுவதும் CGHS மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் சங்கிலித் தொடரைக் கொண்டுள்ளது. அங்கு ஊழியர்கள் தாங்களாகவே சிகிச்சை பெறலாம். CGHS குழுவில் உள்ள மருத்துவமனைகளிலும் அவர்கள் சிகிச்சை பெறலாம். அரசாங்கம் ஊழியர்களிடமிருந்து ரூ.250 முதல் ரூ.1,000 வரை CGHS கட்டணங்களை வசூலிக்கிறது.
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டரில், கிரேடு பே 1800 (லெவல் 1, அடிப்படை ஊதியம் ரூ.28,000 மற்றும் ரூ.30,600), கிரேடு பே 2400 (லெவல் 4, அடிப்படை ஊதியம் ரூ.35,300 மற்றும் ரூ.39,800), கிரேடு பே 2800 (லெவல் 5, ரூ.42,800 மற்றும் ரூ.54,200), மற்றும் கிரேடு பே 4800 (லெவல் 8, அடிப்படை ஊதியம் ரூ.60,400 மற்றும் ரூ.78,800) ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட சம்பளம், HRA, TA, NHS மற்றும் CGHS தொகைகளை கணக்கிடலாம். இந்த கணக்கீட்டிற்கு, 24 சதவீத HRA மற்றும் அதற்கு மேற்பட்ட TPTA நகரங்களின் TA எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
Grade Pay 1800 (Level 1, basic Rs 28,600): கிரேட் பே 1800 -க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (நிலை 1, அடிப்படை ரூ.28,000): திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் - ரூ.63,840 / HRA - ₹ 15,321.60 / TA - ₹ 3,600 / மொத்த சம்பளம் - ₹ 82,761.60 / NPS - ₹ 6,384.00 / CGHS - ₹ 250 / நிகர சம்பளம் - ₹ 76,127.60
Grade Pay 1800 (Level 1, basic Rs 30,600): கிரேட் பே 1800 -க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (லெவல் 1, அடிப்படை ரூ. 30,600): திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் - ₹ 69,768 / HRA - ₹ 16,744.32 / TA ₹ 3,600 / மொத்த சம்பளம் ₹ 90,112.32 / NPS ₹ 6,976.80 / CGHS ₹ 250 / நிகர சம்பளம் ₹ 82,885.52
Grade Pay 2400 (Level 4, basic Rs 35,300): கிரேட் பே 2400 -க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (நிலை 4, அடிப்படை ரூ. 35,300): திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 80,484 / HRA ₹ 19,316.16 / TA ₹ 3,600 / மொத்த சம்பளம் ₹ 1,03,400.16 / NPS ₹ 8,048.40 / CGHS ₹ 250 / நிகர சம்பளம் ₹ 95,101.76
Grade Pay 2400 (Level 4, basic Rs 39,800), கிரேட் பே 2400 -க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (லெவல் 4, அடிப்படை ரூ. 39,800): திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 90,744 / HRA ₹ 21,778.56 / TA ₹ 3,600 / மொத்த சம்பளம் ₹ 1,16,122.56 / NPS ₹ 9,074.40 / CGHS ₹ 250 / நிகர சம்பளம் ₹ 1,06,798.16
Grade Pay 2800 (Level 5, basic Rs 42,800), கிரேட் பே 2800 -க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (நிலை 5, அடிப்படை ரூ. 42,800); திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 97,584 / HRA ₹ 23,420.16 / TA ₹ 3,600 / மொத்த சம்பளம் ₹ 1,24,604.16 / NPS ₹ 9,758.40 / CGHS ₹ 250 / நிகர சம்பளம் ₹ 1,14,595.76
Grade Pay 2800 (Level 5, basic Rs 54,200), கிரேட் பே 2800 -க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (லெவல் 5, அடிப்படை ரூ. 54,200): திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 1,23,576 / HRA ₹ 29,658.24 / TA ₹ 3,600 / மொத்த சம்பளம் ₹ 1,56,834.24 / NPS ₹ 12,357.60 / CGHS ₹ 250 / நிகர சம்பளம் ₹ 1,44,226.64
Grade Pay 4800 (Level 8, basic Rs 60,400), கிரேட் பே 2800 -க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (நிலை 8, அடிப்படை ரூ. 60,400): திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 1,37,712 / HRA ₹ 33,050.88 / TA ₹ 3,600 / மொத்த சம்பளம் ₹ 1,74,362.88 / NPS ₹ 13,771.20 / CGHS ₹ 650 / நிகர சம்பளம் ₹ 1,59,941.68
Grade Pay 4800 (Level 8, basic Rs 78,800): கிரேட் பே 2800 -க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (லெவல் 8, அடிப்படை ரூ. 78,800): திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 1,79,664 / HRA ₹ 43,119.36 / TA ₹ 3,600 / மொத்த சம்பளம் ₹ 2,26,383.36 / NPS ₹ 17,966.40 / CGHS ₹ 650 / நிகர சம்பளம் ₹ 2,07,766.96
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.