PHOTOS

8வது ஊதியக்குழு: அடி தூள்!! 30-34% ஊதிய உயர்வு, அறிக்கையில் வெளிவந்த அட்டகாசமான செய்தி

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழுவில் அவர்களது ஊதியம் 30-34% அதிகரிக்கவுள்ளது. முழு விவரத்தை இங்கே காணலாம்.

Advertisement
1/11
8வது ஊதியக் குழு
8வது ஊதியக் குழு

8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மாத வருமானம் மிகப்பெரிய ஏற்றத்தைக் காணவுள்ளது. 

2/11
அம்பிட் கேபிடல்
அம்பிட் கேபிடல்

8வது ஊதியக்குழுவின் மூலம் சம்பளமும் ஓய்வூதியமும் எவ்வளவு உயரும் என்பதில்தான் அனைவரது கவனமும் உள்ளது. 8வது ஊதியக் குழு அறிவிப்பிற்கு முன்னதாக, புதிய ஊதியக் குழு செயல்படுத்தப்பட்டவுடன், ஊழியர்கள் 30-34% சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்று தரகு நிறுவனமான அம்பிட் கேபிடல் அறிக்கை கணித்துள்ளது.

3/11
7வது ஊதியக்குழு
7வது ஊதியக்குழு

ஊதிய உயர்வு 2026-27 நிதியாண்டில் இருந்து செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசுக்கு சுமார் ரூ.1.8 லட்சம் கோடி செலவாகும் என்று தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2017 நிதியாண்டில் 7வது ஊதியக் குழு செயல்படுத்தப்பட்டபோது இந்த கூடுதல் செலவு ரூ.1.02 லட்சம் கோடியாக இருந்தது.

4/11
ஃபிட்மெண்ட் ஃபாக்டர்
ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

8வது ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து தற்போது அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அது முறையாக அமைக்கப்பட்ட பிறகும், பங்குதாரர்களுடன் இணைந்து அதன் அறிக்கையைத் தயாரிக்க ஆணையம் பல மாதங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிந்துரைகளில் 8வது ஊட்தியக்குழுவிற்கான ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மற்றும் பிற சம்பள திருத்த வழிமுறைகள் பற்றி விவரிக்கப்படும். 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பிறகு அதன் இறுதிப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க சுமார் 18 மாதங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

5/11
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்

சம்பளக் கட்டமைப்புகளை மதிப்பாய்வு செய்து திருத்தங்களை செய்ய, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இந்த 10 ஆண்டுகளில் பணவீக்கத்தை ஈடுசெய்ய உதவும் வகையில், 6 மாதங்ளுக்கு ஒரு முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் அளிக்கப்படுகின்றன.

6/11
அகவிலைப்படி
அகவிலைப்படி

தற்போது, ​​ஜனவரி 2025 இல் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 2% அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து DA மற்றும் DR தற்போது 55% ஆக உள்ளன. ஜூலை 2025 -இல் அகவிலைப்படி 3-4% அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. 

7/11
8வது ஊதியக்குழு
8வது ஊதியக்குழு

8வது ஊதியக் குழு செயல்படுத்தப்பட்டவுடன், சம்பள மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக அப்போது உள்ள அகவிலைப்படி கூறு பூஜ்ஜியமாக மீட்டமைக்கப்படும், அதாவது ரீசெட் செய்யப்படும். இதன் காரணமாக, புதிய ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஃபிட்மெண்ட் ஃபாக்டர் கணிசமாக இருந்தாலும், கையில் கிடைக்கும் சம்பளத்தில் உடனடி நிகர அதிகரிப்பு குறைவாகத் தோன்றலாம். டிஏ ரீசெட், ஃபிட்மென்ட் ஃபாக்டர் உயர்வால் ஏற்படும் லாபத்தை ஈடுகட்டுகிறது என்பதை ஆம்பிட் கேபிடல் நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது.

8/11
ஊதிய உயர்வு
ஊதிய உயர்வு

எடுத்துக்காட்டாக, 6வது சம்பளக் குழுவின் கீழ், ரூ.7,000 அடிப்படை ஊதியம் பெறும் ஒரு ஊழியருக்கு, படிகளுக்குப் பிறகு மொத்த ஊதியம் ரூ.15,750 ஆக இருந்தது. 7வது சம்பளக் குழு, படிகளுக்கு 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரை பயன்படுத்தி, குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.18,000 ஆக உயர்த்தியது - இது டிஏவை திறம்பட மீட்டமைத்து, ஊதிய அமைப்பை மறுசீரமைத்தது. 8வது சம்பளக் குழு அமலுக்கு வந்தவுடன் இதேபோன்ற வழிமுறை எதிர்பார்க்கப்படுகிறது.

9/11
சம்பள உயர்வு
சம்பள உயர்வு

8வது ஊதியக் குழு கணிசமான ஃபிட்மென்ட் ஃபாக்டரை பரிந்துரைக்கும் என்று ஆம்பிட் கேபிடல் எதிர்பார்க்கிறது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு 30–34% சம்பள உயர்வு கிடைக்க வழி வகுக்கும். திருத்தப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை செயல்படுத்துவது நுகர்வைத் தூண்டும் என்றும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு 30 முதல் 50 அடிப்படைப் புள்ளிகளைச் சேர்க்கும் என்றும் தரகு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

10/11
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்

8வது ஊதியக் குழுவின் வெளியீடு சந்தைகளில் ஓய்வூதிய ஓட்டத்தில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அறிக்கை மேலும் கூறியுள்ளது. FY26 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர் ஓய்வூதிய நிதிகளுக்கான அரசாங்கத்தின் பங்களிப்பு சம்பளத்தில் 14% இலிருந்து 18.5% ஆக உயர்ந்துள்ளது.

11/11
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.





Read More