PHOTOS

சனி வக்ர பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அற்புதமான நேரம்.... பணம், புகழ், பதவி அனைத்தும் கிடைக்கும்

Sani Vakra Peyarchi: இன்னும் சில நாட்களில் சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Advertisement
1/10
சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

சனி பகவான் இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

2/10
சனி வக்ர பெயர்ச்சி
சனி வக்ர பெயர்ச்சி

சனி பகவான் ஜூலை 13 ஆம் தேதி காலை 7:24 மணிக்கு வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். சனி பகவான் தொடர்ச்சியாக 138 நாட்களுக்கு அதாவது நவம்பர் 28 வரை வக்ர நிலையில் இருப்பார்.

3/10
சனி பெயர்ச்சி பலன்கள்
சனி பெயர்ச்சி பலன்கள்

சனி வக்கிர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்கள் பல வித லாபங்களை அடைவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

4/10
மேஷம்
மேஷம்

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி மகிழ்ச்சிகாரமானதாக இருக்கும். இந்த நேரத்தில் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பல சோதனைகள் வந்தாலும், அவற்றை வெற்றிகரமாக தாண்டிச்செல்லும் மன வலிமையை சனி பகவான் அளிப்பார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

5/10
கடகம்
கடகம்

கடகம்: கடக ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த நேரம் மிகவும் நல்ல நேரமாக இருக்கும். நீண்ட காலமாக தடைகளை சந்தித்து வந்த பணிகள் விரைவாக தீர்க்கப்படும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வருமான ரீதியாகவும் நல்ல செய்திகள் வரலாம். தொழிலில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சட்ட சிக்கல்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

6/10
மகரம்
மகரம்

மகரம்: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் மகர ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை அமோகமாக இருக்கும். மகர ராசிக்காரர்களுக்கு வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும்.

7/10
கும்பம்
கும்பம்

கும்பம்: சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசிகாரர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையை அளிக்கும். நீண்ட காலமாகத் தடைபட்டிருந்த பணிகள் இப்போது வேகம் பெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

8/10
ஏழரை சனி
ஏழரை சனி

ஏழரை சனி: சனிக்கிரக தோஷம் மற்றும் ஏழரை சனியால் பாதிக்கப்பட்ட ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று அவரை வழிபடலாம். இங்கே அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷம் நிவர்த்தியாகி, சனி அருளால் நன்மைகள் ஏற்பட்டு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

9/10
சனி பகவானின் அருள் பெற
சனி பகவானின் அருள் பெற

சனி பகவானின் பரிபூரண அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். மேலும், “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும்.

10/10
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More