Guru Udhayam: ஜூலை 9 ஆம் தேதி குரு பகவான் உதயமாகவுள்ளார். குரு உதயத்தால் அதிக நன்மைகள் யாருக்கு? அதிர்ஷ்ட ராசிகளின் பட்டியலை இங்கே காணலாம்.
குரு பகவான் மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த குரு பெயர்ச்சி இந்த அண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சுப கிரகமான குரு பகவானின் அனைத்து விதமான மாற்றங்களும் பல வித நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
குரு பகவான் ஜூன் 09, 2025 அன்று மிதுன ராசியில் அஸ்தமனமானார். இப்போது சரியாக ஒரு மாதம் கழித்து, ஜூலை 09 அன்று இரவு 10:50 மணிக்கு, அவர் மிதுன ராசியில் உதயமாகவுள்ளார். குருவின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
12 ராசிக்காரர்களின் வாழ்விலும் குரு உதயத்தின் தாக்கம் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்கள் குரு உதயத்தால் அதிக நன்மைகளை பெறுவார்கள். இவர்கள் வாழ்வில் பொற்காலம் தொடங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு, குரு எட்டாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதி. இப்போது அவர் செல்வ வீட்டில் அதாவது இரண்டாவது வீட்டில் உதயமாகவுள்ளார். இது வருமானத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மாத வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும், முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். குடும்ப முரண்பாடு குறையும், இது மன அமைதியைத் தரும்.
சிம்மம்: சிம்ம ராசிக்கு, குரு ஐந்தாவது மற்றும் எட்டாவது வீட்டின் அதிபதி. இப்போது லாப வீட்டில் உதயமாகிறார். குரு உதயத்தின் தாக்கத்தால், கல்வி, அன்பு மற்றும் நட்புத் துறையில் முன்னேற்றம் ஏற்படும். பழைய வேறுபாடுகள் தீரும். காதல் உறவுகள் வலுவடையும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் எதிர்பாராத நிதி ஆதாயங்களும் கிடைக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு, குரு இப்போது அதிர்ஷ்ட வீட்டில் உதயமாகியுள்ளார். குரு பெயர்ச்சிக்கு பிறகு வரும் இந்த உதயத்தால், ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் வலுவான ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் குறையும். பணியிடத்தில் போட்டி இருந்தாலும், அதில் வெற்றி பெறுவீர்கள். தந்தை அல்லது மூத்தவர்களின் ஆதரவு அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தனுசு: தனுசு ராசியின் அதிபதியான குரு இப்போது ஏழாவது வீட்டில் உதயமாகியுள்ளார். குரு உதயம் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு முடிவுகட்டும். குடும்பத்தில் அமைதி இருக்கும். திருமணத்துக்காக காத்திருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். சொத்து தொடர்பான விஷயங்களிலும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வரலாம்.
கும்பம்: குரு உதயம் கல்வித் துறையில் வெற்றியைத் தரும். மேலும் குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். லாப வீட்டின் அதிபதி ஐந்தாம் வீட்டில் இருப்பது தொழில்முறை வளர்ச்சி மற்றும் பதவி உயர்வைக் குறிக்கிறது. பழைய முதலீடுகள் நன்மைகளைத் தரும். குடும்ப உறவுகள் இனிமையாக இருக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், திருமண பாக்கியம், குழந்தை செல்வம் கிட்டவும், செல்வச் செழிப்பு அதிகரிக்கவும் குரு பகவானை வணங்கி, '‘குரவே சர்வ லோகானாம், பிஷஜே பல ரோகிணாம்; நிதயே சர்வ வித்யானாம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தயே நமஹ" என்ற ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்வது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.